Sachin on Ashwin: "கடைசி வரை போராடுபவர் அஸ்வின்" புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்!
கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஆல்ரவுண்டர் அஸ்வினை புகழ்ந்து பேசியுள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.
அஸ்வின் கட்டுக்கோப்பு பந்துவீச்சு:
மொத்தம் 48 லீக் ஆட்டங்களை கொண்ட இந்த தொடர் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறுது. இச்சூழலில், இந்திய அணி தனது முதல் லீக் போட்டியை கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி விளையாடியது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்து உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொங்கியது இந்திய அணி. முன்னதாக, இந்த ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசிய அஸ்வின் 1 ஓவர் மெய்டனுடன், 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இதனிடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்று வரும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பை தேர்வு குறித்து இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
அஸ்வினை புகழ்ந்த சச்சின்
இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய சச்சின் டெண்டுல்கர், ” அவர் ஒரு அனுபவமிக்க வீரர். தன்னுடைய கடைசி பந்து வரை போராடுபவர். எனக்கு நன்றாகத் தெரியும். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துபவர். கிரிக்கெட் மீதான அஸ்வினின் அணுகுமுறை என்பது அற்புதமானது. ஒரு பந்து வீச்சாளராக அஸ்வினை நான் எப்போதும் விரும்புவேன். அதே நேரம் அவர் ஒரு பேட்ஸ்மேனும் கூட” என்று புன்னைகையுடன் பேசினார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.
மேலும், யுவாராஜ் சிங் குறித்தும் தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்ட அவர், “2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடினார்கள். தங்களது திறமையை வெளிபடுத்தினார்கள். ஆனால் எல்லா போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடியவர் என்றால் அது போட்டியின் நாயகன் யுவராஜ் சிங்காக மட்டும் தான் இருக்கும்” என்றார்.
முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அஸ்வினுடன் இணைந்து விளையாடினார். அதேநேரம் இன்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் களம் இறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND Vs AFG Live Score: விக்கெட் வேட்டையில் இந்தியா; ரன்கள் சேர்க்க தடுமாறும் ஆஃப்கானிஸ்தான்
மேலும் படிக்க: ODI WC 2023 IND vs AFG: அஸ்வினுக்கு இடம் இல்லை.. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு