ODI Captaincy: கேப்டன்சியை பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் பிசிசிஐ: ஒரு நாள் போட்டிக்கான் கேப்டனாக ரோஹித்!
டெஸ்ட், ஒரு நாள், டி20 கிரிக்கெட்டின் இந்திய அணி கேப்டன் பதவிகளை பகிர்ந்தளிக்கும் திட்டத்தில்தான் பிசிசிஐ இருக்கிறது என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்த முடிகின்றது.
2021-ம் ஆண்டு, கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணி சில முக்கிய மாற்றங்களை சந்தித்திருக்கிறது. சர்வதேச டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியதால் ரோஹித் கேப்டனாக்கப்பட்டார், ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிந்ததால் ராகுல் டிராவிட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்போற்று கொண்டது என முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான கேப்டன்சி பொறுப்பில் கோலியே நீடிப்பார் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், ஒரு நாள் கேப்டன்சியும் ரோஹித் வசம் ஒப்படைக்கப்படும் என தகவல் கிடைத்திருக்கிறது. இதனால், டெஸ்ட், ஒரு நாள், டி20 கிரிக்கெட்டின் இந்திய அணி கேப்டன் பதவிகளை பகிர்ந்தளிக்கும் திட்டத்தில்தான் பிசிசிஐ இருக்கிறது என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்த முடிகின்றது.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் வென்ற இந்திய அணி அடுத்து தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக தென்னாப்பிரிக்கா செல்வதாக திட்டமிடப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கான புதிய அட்டவணையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதன்படி, டிசம்பர் 26-ம் தேதி போட்டிகள் தொடங்குகின்றன. 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் டி20 தொடரிலும் விளையாட உள்ளது. டி20 தொடர் விளையாடுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.
இதனால், டெஸ்ட், ஒரு நாள் தொடர்களுக்கான இந்திய அணி விவரம், கேப்டன் யார் என்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஒரு நாள் கேப்டன் பொறுப்பில் கோலியே நீடிப்பாரா அல்லது ரோஹித் பொறுப்பேற்க உள்ளாரா என்பது ஸ்குவாட் அறிவிக்கப்படும்போது தெரிய வரும். எனினும், 2023 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு, இப்போதே ரோஹித் தலைமையில் இந்திய அணியை ஒப்படைக்கும் பணியில் பிசிசிஐ மும்முரமாக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
”ஒரு நாள் கேப்டன் பொறுப்பில் கோலி தொடர்ந்து நீடிப்பார் என்பது சந்தேகமே. இது பற்றி இந்த ஆண்டு முடிவெடுக்கப்படும்” என பிசிசிஐ அதிகாரி ஒருவரி பிடிஐ-க்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதனால், டி20, ஒரு நாள் கேப்டன்சி ரோஹித் வசமும், டெஸ்ட் கேப்டன்சி விராட் கோலியிடமும் ஒப்படைக்கப்படும் என தெரிகின்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்