T20 World Cup: டி20 உலகக் கோப்பை... 'ரோகித் சர்மாவும் விராட் கோலியும்...’ கங்குலியின் ஆசை இதுதான் ! விவரம் உள்ளே!
டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இடம் பெற்றால் தான் டி20 தொடரிலும் இடம்பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
எதிர்வரும் டி 20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடுவாரா என்பது தொடர்பான கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி:
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.
ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமன் செய்து வரலாறு படைத்தது.
இதனிடையே வரும் ஜூன் 1 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை தொடர் தொடங்கும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி 20 போட்டியில், இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து இரு அணிகளும் எந்தவொரு டி 20 தொடரிலும் தற்போது வரை நேரடியாக மோதவில்லை.
ரோகித் மற்றும் விராட்:
அதேநேரம் இதன்பின்னர் நடைபெற்ற எந்த டி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடவில்லை. இச்சூழலில், இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை டி20 தொடரில் இவர்கள் இருவரும் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. முன்னதாக, இந்த முறை உலகக் கோப்பை டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் கடைசி டி 20 தொடர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிதான்.
இந்த தொடர் ஜனவரி 11 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான வீரர்களை ஆப்கானிஸ்தான் அணி அறிவித்துவிட்டது. ஆனால், இந்திய அணி இன்னும் வீரர்களை அறிவிக்கவில்லை. அதனால், இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இடம் பெற்றால் தான் டி20 தொடரிலும் இடம்பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
கங்குலியின் ஆசை:
இந்நிலையில், எதிர்வரும் டி 20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடுவாரா என்பது தொடர்பான கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக கங்குலி பேசுகையில், “இந்திய அணி ஒரு சிறந்த அணி. நமது அணி தோற்றால் உடனே குறை கூற ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் வெற்றியை யாரும் பெரிய அளவில் கொண்டாடுவதில்லை. என்னை பொறுத்தவரை இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் முக்கிய வெற்றிகள் அதிர்ஷ்டம் இல்லாமல் தவறவிடப்படுகிறது.
அந்த வகையில் எதிர்வரும் டி20 உலக கோப்பையை பொறுத்தவரை இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்ல தகுதியான ஒரு அணி. அதோடு இந்த டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த வேண்டும். அதேபோன்று விராட் கோலியும் அந்த தொடரில் இடம்பிடித்து விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Ranji Trophy: டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா? ரஞ்சி கோப்பையில் செய்த சம்பவம்! விவரம் இதோ!
மேலும் படிக்க:India vs South africa test: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்... இந்திய மண்ணில் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?