Rohit Captaincy: ட்ரெண்டிங்.. இந்திய அணிக்கு பலமே ரோஹித் கேப்டன்சிதான்... 11 வெற்றி.. மற்ற கேப்டன்களுக்கு கீழ் படுதோல்வி!
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தலைமையின் கீழ் இந்திய அணி இந்தாண்டு 11 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஒயிட்-பால் கிரிக்கெட்டில் தலைசிறந்த கேப்டனாக தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி இந்தாண்டு 11 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
உலககோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து டி20 போட்டிகளில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
India played 18 matches in this year 2022 - Won 11 matches, lost 7 matches.
— CricketMAN2 (@ImTanujSingh) June 12, 2022
•All 11 matches - Rohit Sharma's captaincy.
•All lost 7 matches - all others captains.
இவரது தலைமையின்கீழ் இந்திய அணி டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ரோஹித் ஷர்மா தலைமை ஏற்று விளையாடிய 11போட்டிகளிலும் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணியை கேஎல் ராகுல் வழிநடத்தினார். இவரது கீழ் விளையாடிய 4 போட்டிகளும் தோல்வி மட்டுமே மிஞ்சியது.
View this post on Instagram
அதேபோல், இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்று பெயர் எடுத்த விராட் கோலி தலைமையில்கீழ் இந்தாண்டு விளையாடிய இந்திய அணி 1 போட்டிகளில் விளையாடி அதிலும் தோல்வியை சந்தித்தது. தற்போது இந்தியாவிற்கு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுபயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலக, அவருக்கு பதிலாக இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் இவரது தலைமையின்கீழ் இந்திய அணி இதுவரை 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதிலும் இந்திய அணிக்கு தோல்வியே கிடைத்தது. இந்தநிலையில், இன்னும் சில மாதங்களில் இந்திய அணி டி 20 உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது.
தற்போது, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இருந்து அனுபவ வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதன் காரணமாகவே இந்திய அணி அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்ததாக இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்