மேலும் அறிய

Rohit Sharma: மட்டமான கேப்டன்சி; கேம் ப்ளானே இல்லை - ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்த மைக்கேல் வாகன்

Rohit Sharma: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ரோகித் சர்மாவின் மட்டமான கேப்டன்சி என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் சோப்பிக்காததால் இந்திய அணியின் தோல்விக்கான முக்கிய காரணமாக பார்க்கபடுகின்றது. தோல்விக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, “ நாங்கள் எங்கே தவறு செய்தோம் என தெரியவில்லை. ஒரு அணியாக இந்த போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளோம்” எனக் கூறினார். 

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டம் மைக்கேல் வாகன் பல காரணங்களை அடுக்கியுள்ளார். இந்த காரணங்கள் அனைத்தும் ரோகித் சர்மாவைச் சுற்றியே உள்ளது. மைக்கேல் வாகன், இரண்டாவது இன்னிங்ஸில் ஒல்லி போப் சிறப்பாக ஆடி ஒரு நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தபோது, ரோகித் சர்மா அதிரடியான முடிவுகளையும் எடுக்கவில்லை, சிறப்பான முடிவுகளையும் எடுக்கவில்லை. போப்பின் விக்கெட்டினை கைப்பற்ற ரோகித் சர்மாவிடம் எந்தவிதமான திட்டமும் இல்லை. ரோகித் சர்மாவின் கேப்டன்சி மிகவும் சுமாராக இருந்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தபோது அதனை தடுப்பதற்கான கேம் ப்ளான் ஒரு கேப்டனாக ரோகித் சர்மாவிடம் இல்லை. குறிப்பாக ஒல்லி போப் ஸ்கோர் செய்த ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப்பினை தடுக்கவும் அதற்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தவும் முயற்சி செய்யவில்லை. 

களத்தில் ரோகித் சர்மா மிகவும் ஆக்ரோஷமாகவும் அடுத்தடுத்து கேம் ப்ளான்களால் நெருக்கடியை உண்டாக்குவார் எனவும் நான் எதிர்பார்த்தேன். ஆனால் ரோகித் சர்மா அப்படி எதுவும் செய்யவில்லை. இங்கிலாந்து அணி வீரர்கள் மிகச் சிறப்பாகவே பவுண்டரிகளை விளாசக்கூடியவர்கள். இதனை தடுக்க எதிரணி தரப்பில் நடவடிக்கை எடுப்பதற்காக பவுண்டரி லைனில் ஃபீல்டர்களை நிற்கவைத்தால், ஆடுகளத்திற்குள் பந்தை தட்டிவிட்டு ஒன்று மற்றும் இரண்டு ரன்கள் எடுப்பார்கள். ரோகித் சர்மாவின்  கேப்டன்சி எனக்கு திருப்திகரமாக இல்லை” எனக் கூறியுள்ளார். 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. அதிலும் குறிப்பாக தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். இரண்டாவது இன்னிங்ஸின் இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 420 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இலக்கை துரத்த இந்திய அணியின் வீரர்களின் முயற்சி போதுமானதாக இல்லாததால், 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகின்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget