Rohit Sharma: இன்னும் 8 சிக்ஸர் தான்..சேவாக்கின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சேவாக்கின் சாதனையை ரோஹித் ஷர்மா முறியடிக்க உள்ளார்.
தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்:
கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி தொடரை கைப்பற்றியது. ஆனால் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமான தோல்வியை சந்தித்தது. இச்சூழலில் தான் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று முன் தினம் சென்னைக்கு வந்தனர். அந்தவகையில் தற்போது வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்காளதேச அணி, முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, செப்டம்பர் 15-ம் தேதி சென்னைக்கு வர உள்ளது. சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 23-ம் தேதி முடிவடைந்ததும், கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சேவாக்கின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித்?
அந்தவகையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு புதிய சாதனையை படைக்க இருக்கிறார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சேவாக்கின் சாதனையை அவர் முறியடிப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வீரேந்திர சேவாக் 91 சிக்ஸர்களை பறக்கவிட்டிருக்கிறார்.
சேவாக்கின் சாதனையை முறியடிக்க ரோஹித்துக்கு 8 சிக்ஸர்கள் தேவை. அவர் இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 84 சிக்சர்களை அடித்துள்ளார். ரோஹித் டெஸ்ட் போட்டியில் 452 பவுண்டரிகள் அடித்துள்ளார்.அதேபோல், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் சிறந்த டெஸ்ட் ஸ்கோர் 212 ரன்கள். சர்வதேச டெஸ்ட்டில் 12 சதங்கள் மற்றும் 17 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Yograj Singh: புலியைக் கொன்றாரா யுவராஜ் சிங் தாத்தா? யோகராஜ் சிங் சொன்ன சர்ச்சை பதில்!
மேலும் படிக்க: IPL 2025 Dhoni:பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி.. கோபத்தில் எட்டி உதைத்த தோனி! உண்மையை உடைத்த சிஎஸ்கே வீரர்