மேலும் அறிய

Rishabh Pant Health: உலகக்கோப்பையிலும் ரிஷப் பண்ட் இல்லை? இந்திய அணிக்கு மாற்று வீரர் யார்?

விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட், நடப்பாண்டு முழுவதும் சர்வதேச போட்டிகலில் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தானது உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியின் குருகுல் நர்சன் பகுதியில் நிகழ்ந்தது. இதையடுத்து பொதுமக்களால் ரிஷப் மீட்கப்பட்டு,  டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு அறுவை சிகிச்சை:

பண்டிற்கு மூளை மற்றும் தண்டு வடத்தில் எந்த வித பிரச்சனையும் ஏற்படவில்லை என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், நெற்றியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. மேலும் கை மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன் மேல்சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, கடந்த ஜனவரி 6 ஆம் தேதி பண்டிற்கு வலது முழங்காலில் தசைநார் கிழிவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

18 மாதங்களுக்கு ஓய்வு:

இந்தநிலையில், விரைவில் குணமடைந்து இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், இந்தாண்டு முழுவதும் பண்ட் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அதன்படி, ரிஷப் பண்ட் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப 18 மாதங்கள் வரை ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் ஏற்பட்ட காயங்களில் இருந்து குணமடைய, பண்டிற்கு நீண்ட காலம் தேவைப்படும் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, நடப்பாண்டு ஐபிஎல் தொடர், 50 ஓவர் உலகக்கோப்பை, முழு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், WTC இறுதிப் போட்டி, அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டிகளில் பாதி, 2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் மற்றும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம்  நடைபெற உள்ள 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றில் ரிஷப் பண்ட் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

மருத்துவ அறிக்கை:

விக்கெட் கீப்பராக உள்ளதால் சக வீரர்களை காட்டிலும், பண்டிற்கு உடற்தகுதி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் காரணமாக, அவரது உடற்தகுதியில் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் நீண்ட கால ஓய்விற்கு பிறகு, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பண்ட் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அண்மையில் வெளியான மருத்துவ அறிக்கையில், ”பண்ட்க்கு விபத்தின்போது வலது காலில் மூன்று தசைநார்கள் கிழிந்துள்ளது. அதில், இரண்டு தசைநார்கள் கடந்த ஜனவரி 6ம் தேதி அன்று அறுமை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், இன்னும் ஒரு அறுமை சிகிச்சை இன்னும் செய்யப்படவில்லை. இந்த அறுவை சிகிச்சை செய்ய குறைந்தது 6 வாரங்கள் காத்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழங்காலின் மூன்று தசைநார்கள் : 

முன்புற தசைநார்கள்
பின்புற தசைநார்கள்
இடைநிலை இணைதசைநார்கள்

ஒரு மனிதன் நடக்க இந்த மூன்று தசைநார்கள் மிக முக்கியம். பண்ட்க்கு இந்த மூன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒன்றை சரிசெய்ய இன்னும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

கே.எஸ். பாரத் மற்றும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு: 

ரிஷப் பண்ட் விபத்துக்கு பிறகு மும்பையில் உள்ள மருத்துவமனையில் நலமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், இவர் இல்லாத பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கும் பாரத் மற்றும் இஷான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது செயல்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் போட்டிகளில், தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget