Rishabh Pant: ’களத்தில் உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்’... விபத்துக்கு பிறகு முதல் ட்வீட் செய்த ரிஷப் பண்ட்..!
அறுவை சிகிச்சை வெற்றிகரமான முடிந்துள்ளதாகவும், வரவிருக்கும் சவால்களுக்கு தயாராக இருப்பதாக பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ம் தேதி சாலை விபத்தில் காயமடைந்தார். பண்ட் தனது மெர்சிடிஸ் காரில் ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்துக்குப் பிறகு, ரிஷப் பண்ட்க்கு முதலில் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
விபத்துக்கு பிறகு தற்போது ரிஷப் பண்ட் முதல்முறையாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தனது அறுவை சிகிச்சை வெற்றிகரமான முடிந்துள்ளதாகவும், வரவிருக்கும் சவால்களுக்கு தயாராக இருக்கிறேன். பிசிசிஐ, ரசிகர்கள், அரசு அதிகாரிகளுக்கு பண்ட் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ அனைத்து ஆதரவுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நான் பணிவாகவும் நன்றியுடனும் இருக்கிறேன். எனது அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மீட்பதற்கான பாதை தொடங்கிவிட்டது, வரவிருக்கும் சவால்களுக்கு நான் தயாராக இருக்கிறேன். பிசிசிஐ, ஜெய்ஷா மற்றும் அரசு அதிகாரிகளுக்கு என் நன்றி.
I am humbled and grateful for all the support and good wishes. I am glad to let you know that my surgery was a success. The road to recovery has begun and I am ready for the challenges ahead.
— Rishabh Pant (@RishabhPant17) January 16, 2023
Thank you to the @BCCI , @JayShah & government authorities for their incredible support.
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஊக்குவிப்புக்காக எனது ரசிகர்கள், அணியினர், மருத்துவர்கள் மற்றும் பிசியோக்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் அனைவரையும் களத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என பதிவிட்டுருந்தார்.
ரிஷப் பண்ட் கோகிலாபென் மருத்துவமனையில் தசைநார் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இப்போது ரிஷப் பந்திற்கு அடுத்த ஆறு வாரங்களுக்குள் மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பண்ட் ஐபிஎல் மற்றும் ஆசிய கோப்பை மற்றும் அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.
கார் விபத்துக்குப் பிறகு, மேக்ஸ் மருத்துவமனையில் பேன்ட்டின் மூளை மற்றும் முதுகுத் தண்டின் எம்ஆர்ஐ செய்யப்பட்டது. ஆனால் வீக்கம் மற்றும் வலி காரணமாக, அவரது முழங்கால் மற்றும் கணுக்கால் MRI செய்ய முடியவில்லை. கணுக்கால் மற்றும் முழங்கால் இரண்டிலும் பேன்ட்டுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று தெரிகிறது. முழங்கால் தசைநார் அறுவை சிகிச்சையிலிருந்து மீள பொதுவாக 6-8 மாதங்கள் ஆகும்.