![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை..இந்திய அணியில் எப்போது இணைவார் ஹர்திக்? வெளியான முக்கிய தகவல்!
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா எப்போது இணைவார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
![T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை..இந்திய அணியில் எப்போது இணைவார் ஹர்திக்? வெளியான முக்கிய தகவல்! Reports Hardik Pandya To Join Team India Squad Ahead Of T20 World Cup 2024 T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை..இந்திய அணியில் எப்போது இணைவார் ஹர்திக்? வெளியான முக்கிய தகவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/c2a7075048b25d375aa0e8c94d5dd8db1716826856997572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டி20 உலகக் கோப்பை:
டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இந்த டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இச்சூழலில் டி20 உலகக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி வீரர்கள் நேற்றே அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்று விட்டனர்.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்து இரண்டு முறையும் கோப்பைகளை தவறவிட்டது. இது வீரர்கள் மட்டும் இன்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனை அளிப்பதாக அமைந்தது.
அமெரிக்கா சென்ற ரோகித் படை:
இந்நிலையில் தான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் அமெரிக்காவிற்கு சென்றிருக்கின்றனர்.
அதேநேரம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இன்னும் அணியில் இணையவில்லை. அதேபோல் இந்திய டி20 உலகக் கோப்பை அணியின் துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் இன்னும் இந்திய அணியில் இணையவில்லை.
ஐபிஎல் எலிமினேட்டர் மற்றும் குவாலிபியர் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்ததால் சஞ்சு சாம்சன் மற்றும் விராட் கோலி அமெரிக்காவிற்கு செல்ல வில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா செல்லாதது தான் ரசிகர்களிடன் கேள்விகளை எழுப்பியது.
ஹர்திக் பாண்டியா எப்போது இணைவார்?
இதனிடையே பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”இந்திய அணி மும்பையில் இருந்து நியூயார்க் புறப்பட்டது. ஹர்திக் பாண்டியா வெளிநாட்டில் இருந்ததால் அவர் இந்திய அணியுடன் செல்ல வில்லை. தனிப்பட்ட முறையில் அவர் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். அதேநேரம் ஜூன் 1 ஆம் தேதிக்குள் அவர் இந்திய அணியில் இணைவார்” என்று கூறப்பட்டது.
முன்னதாக இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார் ஹர்திக் பாண்டியா. ரோகித் சர்மா இருந்த பொறுப்பை அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வழங்கியது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.
அதேபோல், இந்த சீசனில் ப்ளே ஆப் சுற்றிற்கு கூட செல்லாமல் முதல் அணியாக ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் வெறும் 216 ரன்கள் தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Kavya Maran: ரசிகர்களின் மனதை வென்ற காவ்யா மாறன்! ட்ரெஸ்ஸிங் ரூமில் என்ன பேசினார் தெரியுமா?
மேலும் படிக்க: Ambati Rayudu: "நீ ஒரு ஜோக்கர்" அம்பத்தி ராயுடுவை மைதானத்திலே பங்கம் செய்த பீட்டர்சன்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)