Shoib Malik - Sania Mirza : ஷோயப் மாலிக் - சானியா மிர்ஸா பிரிவிற்கு காரணம் பாகிஸ்தான் நடிகையா...?
தற்போதைய தகவல்கள் படி மாலிக்கிற்கு பாகிஸ்தான் நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் சானியா மிர்சா அவரோடு விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தவவல்கள் வந்துள்ளன.
ஷோயப் மாலிக் சானியா மிர்சாவை விட்டு பிரியப்போவதாக வெளியாகி வரும் வதந்திகளுக்கு பாகிஸ்தான் நடிகை ஒருவர் தான் காரணம் என்று புதிதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
மாலிக்-மிர்ஸா விவாகரத்து?
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சில நாட்களாக கூறப்பட்டு வருகிறது. சானியா மிர்சாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவை பார்க்கும் சிலர், இந்த தம்பதிகளுக்கு இடையே திருமண வாழ்க்கையில் பிரச்சனை உருவாகி வருவதாக சந்தேகிக்கின்றனர்.
இப்போது வரை, அவர்களின் பிரிவுக்கான சரியான காரணம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் தற்போதைய தகவல்கள் படி மாலிக்கிற்கு பாகிஸ்தான் நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் அதனால் சானியா மிர்சா அவரோடு விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தவவல்கள் வந்துள்ளன.
நடிகையுடன் தொடர்பு
மாலிக் மற்றும் சானியா பிரிவதாக பரவி வரும் செய்தியில் சமீபத்திய அப்டேட் பாகிஸ்தான் நடிகையும், பாடகியுமான ஆயிஷா ஓமருடன் மாலிக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறுகிறது. ஆயிஷா மற்றும் மாலிக் இருவரும் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு விளம்பர போட்டோஷூட்டில் ஒன்றாக தோன்றினர். மேலும் திருமணமான தம்பதியினரான ஷோயப் மாலிக் மற்றும் சானியா இடையே ஏற்படக்கூடிய பிளவுக்கு ஆயிஷா தான் காரணம் என்ற வதந்திகளுக்கு மத்தியில் பல சமூக ஊடக தளங்களில் அந்த படங்கள் வைரலாகி வருகின்றன.
யார் இந்த ஆயிஷா?
பாகிஸ்தான் ஷோபிஸ் துறையில் அதிகம் தேடப்படும் பெயர்களில் ஆயிஷாவும் ஒருவர். காஃப் கங்கனா, தாய் சால், கராச்சி சே லாகூர், ரெஹ்ப்ரா, யால்கார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அவர் தனது பாடும் திறன் மற்றும் அவரது மெல்லிசை குரல் ஆகியவற்றிற்காகவும் அறியப்படுகிறார் மேலும் கோக் ஸ்டுடியோ பாகிஸ்தானிலும் இடம்பெற்றுள்ளார்.
தொடர்ந்து வரும் சர்ச்சை
கடந்த வாரம் சானியா மிர்சா "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன அல்லாஹ்வைக் கண்டுபிடிக்க" என்று எழுதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மறைமுக கருத்து ஒன்றை பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி பிரிந்து சென்று சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக பாகிஸ்தான் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுவந்தன. இந்த ஜோடி இப்போது மகன் இஷானை பார்த்துக்கொள்ள மட்டுமே சந்திக்கிறார்கள் என்று வதந்திகள் பரபரப்பாக பேசப்படுகின்றன. ஆனால், இது குறித்து இருவருமே கருத்து தெரிவிக்காத நிலையில் ஏகப்பட்ட வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. தற்போது வந்துள்ள இந்த செய்தி வதந்தியா? உண்மையா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திருமணம்
நட்சத்திரங்கள் பலர் கூட, விளையாட்டு வீரர்களான சானியா மிர்ஸா மற்றும் ஷோயப் மாலிக் ஏப்ரல் 2010 இல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களுக்கு நான்கு வயதில் இஷான் மிர்சா மாலிக் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த ஜோடி சமீபத்தில் தங்கள் மகனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடியது, அதன் படங்களை ஷோயப் மாலிக் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.