மேலும் அறிய

Ravindra Jadeja: உடல்தகுதியை நிரூபிக்க இதுவே சரியான தருணம்.. தமிழ்நாடு எதிரான ரஞ்சியில் களம் காணும் ஜடேஜா...!

ஜடேஜா குறைந்தபட்சம் ஒரு சொந்த மண்ணில் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து மீண்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்கு முழுமையாக திரும்புகிறாரா? இல்லையா?  என்பது குறித்து பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் உட்பட இதுவரை யாரும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. 

இருப்பினும், சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜா 17 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டார். ரவீந்திர ஜடேஜா பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. ரவீந்திர ஜடேஜாவுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமி அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ரவீந்திர ஜடேஜா முழு உடல் தகுதியுடன் இல்லை என்று இந்திய அணியின் தேர்வாளர்கள் நம்புகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவாரா?

பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது. அதே நேரத்தில் இந்த தொடருக்கான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இடம் பிடித்துள்ளார். ஆனால், இதற்கு பிசிசிஐ நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி, ரவீந்திர ஜடேஜா குறைந்தபட்சம் ஒரு ஹோம் மேட்ச்சில் விளையாட வேண்டும் என்று கேட்டு கொண்டது. ஜடேஜா உண்மையில் உடல் தகுதியுடன் இருந்தால், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனாகவும், ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பும் ஜடேஜா குறைந்தது ஒரு இன்னிங்ஸில் 30 முதல் 35 ஓவர்கள் வீச வேண்டி இருக்கும். எனவே, ஜடேஜா குறைந்தபட்சம் ஒரு சொந்த மண்ணில் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, தமிழ்நாடு அணிக்கு எதிராக வருகிற ஜனவரி 24ம் தேதி ரவீந்திர ஜடேஜா, சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் விளையாடி தனது உடற்தகுதியை ரவீந்திர ஜடேஜா நிரூபிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023: 

டெஸ்ட் தொடர்:

பிப்ரவரி 9-13: முதல் டெஸ்ட்
பிப்ரவரி 17-21: இரண்டாவது டெஸ்ட்
மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட்
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட்

ஒருநாள் தொடர்:

மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (வி.கே.), இஷான் கிஷன் (வி.கே.), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.

குறிப்பு: ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவது உடற்தகுதிக்கு உட்பட்டது.

இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

FASTag பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி: ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு - முழு விபரம் உள்ளே!
FASTag பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி: ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு - முழு விபரம் உள்ளே!
IPL 2026 CSK vs RR: தோனி இல்லாத சிஎஸ்கே முதலில் பேட்டிங்! ராஜநடை போடுமா ராஜஸ்தான்? ஜடேஜாவா? சாம்சனா?
IPL 2026 CSK vs RR: தோனி இல்லாத சிஎஸ்கே முதலில் பேட்டிங்! ராஜநடை போடுமா ராஜஸ்தான்? ஜடேஜாவா? சாம்சனா?
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
Mangesh Yadav RCB: லாரி ஓட்டுநர் மகன்.. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர்! வறுமையை வென்ற திறமை! ஆர்சிபியின் அஸ்திரம் மங்கேஷ்யாதவ்!
லாரி ஓட்டுநர் மகன்.. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர்! வறுமையை வென்ற திறமை! ஆர்சிபியின் அஸ்திரம் மங்கேஷ்யாதவ்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE Apr.1: ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
Trichy KN Nehru Speech: “ஆணையிடுங்கள் ஸ்டாலின்“; திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெல்லும்; சபதமெடுத்த கே.என். நேரு
“ஆணையிடுங்கள் ஸ்டாலின்“; திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெல்லும்; சபதமெடுத்த கே.என். நேரு
Trump Iran War Hormuz: “தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
“தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Karunas: நான் இல்லை.. எடப்பாடி பழனிசாமி தான் ஒரிஜினல் ரவுடி.. கடுமையாக விமர்சித்த கருணாஸ்!
Karunas: நான் இல்லை.. எடப்பாடி பழனிசாமி தான் ஒரிஜினல் ரவுடி.. கடுமையாக விமர்சித்த கருணாஸ்!
Aadhav Arjuna: அம்மாவின் தற்கொலை.. மேடையில் கதறி அழுத ஆதவ் அர்ஜூனா.. கண்கலங்கிய தவெக தொண்டர்கள்!
Aadhav Arjuna: அம்மாவின் தற்கொலை.. மேடையில் கதறி அழுத ஆதவ் அர்ஜூனா.. கண்கலங்கிய தவெக தொண்டர்கள்!
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Embed widget