மேலும் அறிய

R Ashwin: 500 விக்கெட்டுகளை நோக்கி சுழற்பந்து ராட்ஷசன் அஸ்வின்; உலக சாதனையில் தடம் பதிப்பாரா?

Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைக்கவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரர் என்று வீரர்களை வரிசைப்படுத்தினால் அதில் கட்டாயம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் கட்டாயம் இடம் பெறும். சுழற்பந்து வீச்சாளராக விளங்கும் அஸ்வின், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றார். அணிக்கு ஒரு பந்து வீச்சாளராக மட்டும் இல்லாமல், சிறந்த பேட்ஸ்மேனாகவும் விளங்கி வருகின்றார். நெருக்கடியான நிலையில் இந்திய அணி அஸ்வினை களமிறக்கி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாத வண்ணம் விளையாட வைக்கும் அளவிற்கு பேட்டிங்கிலும் கைதேர்ந்தவர் அஸ்வின் என்றே கூறவேண்டும். 

இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இதுவரை முடிந்துள்ள இரண்டு போட்டிகளுடன் சேர்த்து அஸ்வின் 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அடுத்து வரும் மூன்று போட்டிகளில் விளையாடினால் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெறுவார். 

R Ashwin: 500 விக்கெட்டுகளை நோக்கி சுழற்பந்து ராட்ஷசன் அஸ்வின்; உலக சாதனையில் தடம் பதிப்பாரா?

அஸ்வின் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 499 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் அஸ்வின்.  நாளை நடக்கவுள்ள அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அடைவார். இதன் மூலம் சர்வதேச அளவில் 500 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 9வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் அடைவார். இது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையையும் தன் வசப்படுத்தியுள்ளார். இதுவரை அஸ்வின் 95 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 

R Ashwin: 500 விக்கெட்டுகளை நோக்கி சுழற்பந்து ராட்ஷசன் அஸ்வின்; உலக சாதனையில் தடம் பதிப்பாரா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அஸ்வின் மொத்தம் நான்கு ஆயிரத்து 284.3 ஓவர்கள் பந்து வீசியுள்ளார். அதாவது 25 ஆயிரத்து 707 பந்துகள் வீசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது சிறந்து பந்து வீச்சு என்றால் அது 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியதுதான். அதேபோல் அஸ்வின், இதுவரை 34 முறை 5 விக்கெட்டுகளும் 24 முறை 4 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.  500 மற்றும் அதற்கு மேல் டெஸ்ட்டில் விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் வீரர் என்றால் அது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே. இவர் 132 போட்டிகளில் 619 விக்கெட்டுகள் கைப்பற்றி, சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற வரிசையில் 4வது இடத்தில் உள்ளார். 

இது மட்டும் இல்லாமல் அஸ்வின் பேட்டிங்கில் தனி முத்திரை பதித்துள்ளார் என்றே கூறவேண்டும். 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 138 இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். அதில் 5 சதங்களும் 14 அரைசதங்களும் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 124. 375 பவுண்டரிகளும் 21 சிக்ஸர்களும் பறக்கவிட்டுள்ளார் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அஸ்வின் ஆறு ஆயிரத்து 37 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இவரது ஆவ்ரேஜ் ஸ்கோர் 26.59ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 54.18ஆகவும் உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK District Secretaries 2nd List: தவெக 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் லிஸ்ட் இதோ... வெள்ளி நாணயத்துடன் பொறுப்பை வழங்கிய விஜய்...
தவெக 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் லிஸ்ட் இதோ... வெள்ளி நாணயத்துடன் பொறுப்பை வழங்கிய விஜய்...
CHN Metro Stops Parking Pass: சென்னை மெட்ரோ ரயில் பயணிகளே.! இனி பார்க்கிங் பாஸ் கிடையாது...
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளே.! இனி பார்க்கிங் பாஸ் கிடையாது...
ஈசிஆரில் பெண்களைத் துரத்திய இளைஞர்கள்; வைரல் வீடியோ- நடந்தது என்ன? கண்டுபிடித்த காவல்துறை!
ஈசிஆரில் பெண்களைத் துரத்திய இளைஞர்கள்; வைரல் வீடியோ- நடந்தது என்ன? கண்டுபிடித்த காவல்துறை!
AICTE Scholarship: ரூ.2 லட்சம்; 5200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விண்ணப்பிப்பது எப்படி?
AICTE Scholarship: ரூ.2 லட்சம்; 5200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK District Secretaries 2nd List: தவெக 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் லிஸ்ட் இதோ... வெள்ளி நாணயத்துடன் பொறுப்பை வழங்கிய விஜய்...
தவெக 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் லிஸ்ட் இதோ... வெள்ளி நாணயத்துடன் பொறுப்பை வழங்கிய விஜய்...
CHN Metro Stops Parking Pass: சென்னை மெட்ரோ ரயில் பயணிகளே.! இனி பார்க்கிங் பாஸ் கிடையாது...
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளே.! இனி பார்க்கிங் பாஸ் கிடையாது...
ஈசிஆரில் பெண்களைத் துரத்திய இளைஞர்கள்; வைரல் வீடியோ- நடந்தது என்ன? கண்டுபிடித்த காவல்துறை!
ஈசிஆரில் பெண்களைத் துரத்திய இளைஞர்கள்; வைரல் வீடியோ- நடந்தது என்ன? கண்டுபிடித்த காவல்துறை!
AICTE Scholarship: ரூ.2 லட்சம்; 5200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விண்ணப்பிப்பது எப்படி?
AICTE Scholarship: ரூ.2 லட்சம்; 5200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விண்ணப்பிப்பது எப்படி?
AIADMK vs BJP: போட்டுத்தாக்கிய டெல்லி மேலிடம்! எடப்பாடி காலில் விழுந்து பதவியை தக்க வைத்துக்கொண்ட அண்ணாமலை! கசிந்தது தகவல்!
AIADMK vs BJP: போட்டுத்தாக்கிய டெல்லி மேலிடம்! எடப்பாடி காலில் விழுந்து பதவியை தக்க வைத்துக்கொண்ட அண்ணாமலை! கசிந்தது தகவல்!
TN BJP Vs ADMK: தமிழ்நாடு பாஜகவிற்கு இப்படி ஒரு நிலைமையா.? அதிமுக கையில் சிக்கியுள்ள தலைவர் பதவி...
தமிழ்நாடு பாஜகவிற்கு இப்படி ஒரு நிலைமையா.? அதிமுக கையில் சிக்கியுள்ள தலைவர் பதவி...
"இருக்கு! சம்பவம் இருக்கு" அஜித் படத்தில் ஐகானிக் இசை! அடித்துச் சொல்லும் ஜிவி பிரகாஷ்
Steve Smith Record: 10 ஆயிரம் ரன்கள்! டெஸ்ட் கிரிக்கெட்டில் புது உச்சத்தைத் தொட்ட ஸ்மித்!
Steve Smith Record: 10 ஆயிரம் ரன்கள்! டெஸ்ட் கிரிக்கெட்டில் புது உச்சத்தைத் தொட்ட ஸ்மித்!
Embed widget