Asia Cup 2023: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிய வீரர் களமிறங்க மாட்டார் - இறுதி நேரத்தில் டிராவிட் கொடுத்த ஷாக்
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் ஒருநாள் போட்டி வடிவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடரை நடத்துகின்றன.
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் ஒருநாள் போட்டி வடிவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடரை நடத்துகின்றன. நாளை அதாவது ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வரை தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை முதல் துவங்கும் இந்த தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதவுள்ளன. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்திய அணியும் தனது முதல் போட்டியில் செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இரு அணிகளும் கிட்டத்தட்ட் ஓராண்டுக்குப் பின்னர் மோதிக் கொள்வதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இரு அணிகளும் ஒருநாள் வடிவில் மோதிக் கொண்டன. இதன் பின்னர் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான கே.எல். ராகுல் இந்திய அணி விளையாடவுள்ள முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார். அதாவது பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் இந்திய அணியுடன் இணைய மாட்டார். அதன் பின்னர் இந்திய அணியில் அவர் இணைந்து கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்.
கே.எல். ராகுல் இந்த ஆண்டில் நடைபெற்ற 16வது ஐபிஎல் தொடரில் பீல்டிங்கின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் மேற்கொண்டு விளையாடமுடியாமல் போனது. இதனால் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும் தவறவிட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடமுடியாமல் போனது.
இந்நிலையில் அவர், முழு உடல் தகுதியை எட்டிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இந்திய அணியில் காயங்கள்இல் இருந்து மீண்ட பின்னர் அணியில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்கள் வரிசையில் வேகபப்ந்து வீச்சாளர் பும்ரா மற்றும் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் உள்ளனர்.
ஆசிய கோப்பைக்கான் இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா. ஸ்டாண்ட்-பை வீரர்: சஞ்சு சாம்சன்