Quinton De Kock's Newborn Baby: கண்ணான கண்ணே.! பெண் குழந்தைக்கு தந்தையான டி காக்.! நெகிழ்ச்சி பதிவு!
பிறந்த குழந்தைக்கு ‘கியரா’ என பெயரிட்டுள்ளனர் டி காக் தம்பதியர். இது குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது
![Quinton De Kock's Newborn Baby: கண்ணான கண்ணே.! பெண் குழந்தைக்கு தந்தையான டி காக்.! நெகிழ்ச்சி பதிவு! Quinton De Kock blessed with baby girl named Kiara, shares first photo on instagram Quinton De Kock's Newborn Baby: கண்ணான கண்ணே.! பெண் குழந்தைக்கு தந்தையான டி காக்.! நெகிழ்ச்சி பதிவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/06/d71564f9ceb3dfefc0b0f94ab94012c8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான குவிண்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். குடும்பத்தினருடன் இனி நேரம் செலவிட இருப்பதாக குறிப்பிட்டிருந்த அவர், முதல் குழந்தையை எதிர்ப்பார்த்து இருந்தார். இந்நிலையில், இன்று டி காக்கிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் டி காக்.
”ஓய்வு அறிவிப்பது குறித்த நீண்ட ஆலோசனை மேற்கொண்டேன், அதிக நேரம் எடுத்து கொண்டேன். நானும் என் மனைவி சாஷாவும் எங்களுடைய முதல் குழந்தையை எதிர்ப்பார்த்து இருக்கும் இந்த தருணத்தில் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதை முதன்மையாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிப்பவன் நான். தென்னாப்ரிக்காவுக்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்” என ஓய்வு அறிவிப்பின்போது டி காக் தெரிவித்திருந்தார்.
இன்று, அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில், ‘கியரா’ என பெயரிட்டுள்ளனர் டி காக் தம்பதியர். இது குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வட்டாரத்தில் டி காக்கிற்கு வாழ்த்துகள் குவிந்துள்ளது.
View this post on Instagram
29 வயதான டி காக், கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 54 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 3,300 ரன்கள் எடுத்திருக்கிறார்.மேலும், 6 சதங்கள், 22 அரை சதங்கள் அடித்து அசத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 221 கேட்சுகள், 11 ஸ்டம்பிங்ஸ் என மொத்தம் 232 விக்கெட்டுகளுக்கு காரணமாக இருந்திருக்கிறார்.
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வரலாறு வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் தென்னாப்ரிக்கா தோல்வியை தழுவியதை அடுத்து குவிண்டன் டி காக் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதனை அடுத்து, ஜோஹனஸ்பெர்க்கில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)