Punjab Kings Batting Coach: பஞ்சாப் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாபர் மீண்டும் நியமனம்..! கைகொடுக்குமா மாற்றங்கள்..?
பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாபரை மீண்டும் அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
![Punjab Kings Batting Coach: பஞ்சாப் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாபர் மீண்டும் நியமனம்..! கைகொடுக்குமா மாற்றங்கள்..? Punjab Kings has been re-appointed Wasim Jaffer as their batting coach in IPL 2023 Punjab Kings Batting Coach: பஞ்சாப் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாபர் மீண்டும் நியமனம்..! கைகொடுக்குமா மாற்றங்கள்..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/16/e2300d44a55af9765326d356e2041bd21668616239674102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐ.பி.எல். தொடரின் முக்கியமான அணியாக விளங்குவது பஞ்சாப்கிங்ஸ். ஐ.பி.எல். தொடக்க காலம் முதல் விளையாடும் அணிகளில் ஒன்றான பஞ்சாப்கிங்ஸ் அணி, இதுவரை அனைத்து சீசன்களிலும் ஆடினாலும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றியதில்லை.
மீண்டும் ஜாபர் :
யுவராஜ்சிங், சேவாக், அஸ்வின், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் என ஏராளமானார் பஞ்சாப் அணிக்கு தலைமை தாங்கினாலும் இதுவரை அந்த அணியால் ஒரு முறை கூட கோப்பையை தன்வசப்படுத்த இயலவில்லை. இந்த நிலையில், பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Jiska tha besabri se intezaar, introducing our 🆕 Batting Coach, Wasim Jaffer! 🤩#SherSquad, reply with a meme to welcome the King! 👇#SaddaPunjab #PunjabKings #WasimJaffer #IPL pic.twitter.com/hpej5YO9c9
— Punjab Kings (@PunjabKingsIPL) November 16, 2022
வாசிம் ஜாபர் கடந்த 2019ம் ஆண்டு பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். நடப்பாண்டில் நடைபெற்ற ஏலத்திற்கு முன்பாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து, நடப்பு தொடரில் இருந்து கேப்டன் மயங்க் அகர்வாலை அந்த அணி விடுவித்துக்கொண்டது.
ஷிகர்தவான் கேப்டன் :
இதையடுத்து, 2023ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடரின் கேப்டனாக ஷிகர்தவானை பஞ்சாப் அணி தேர்வு தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணி தங்களது வீரர்களில் 16 பேரை தக்கவைத்துள்ளது. பஞ்சாப் அணிக்காக மீண்டும் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள வாசிம் ஜாபர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கலக்கியவர்.
44 வயதான வாசிம் ஜாபர் 31 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதம் 2 இரட்டை சதம் 11 அரைசதம் உள்பட 1944 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 212 ரன்களை எடுத்துள்ளார். 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 ரன்களையும், 8 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 130 ரன்களையும், அதில் ஒரு அரைசதமும் விளாசியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் வாசிம் ஜாபர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)