மேலும் அறிய

HBD MS Dhoni: முடி வெட்டாதீங்க! முன்னாள் அதிபரின் மனம் கவர்ந்த தோனியின் ஹேர்ஸ்டைல்! தோனிக்கு விசில் அடிங்க..

HBD MS Dhoni: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் தோனியின் ஹேர்ஸ்டைலுக்கு மிகப்பெரிய ரசிகர் ஆவார்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் சில வீரர்கள் மட்டுமே என்றுமே தனித்துவமானவராக திகழ்பவர்கள். அவர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு என்று தனி சகாப்தமாகவே திகழ்கிறார். அவருக்கு இன்று 44வது பிறந்தநாள் ஆகும்.

தோனியை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர்:

இன்றைய 2கே கிட்ஸ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பரீட்சயமான தோனி, இந்திய அணிக்காக அட்டகாசமான பல இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். அதுவும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் ஒருநாள் போட்டியில் அதிரடியாக எடுத்த 148 ரன்கள்தான் அவரது அதிரடியின் தொடக்கம் ஆகும்.

அந்த வகையில், 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த போட்டித் தொடரின் முடிவில் இந்திய அணிக்கு வெற்றிக் கோப்பையை வழங்கும் முன் அந்த நாட்டின் அப்போதைய அதிபர் பர்வேஷ் முஷரப் தோனியை பாராட்டியிருப்பார்.

முடி வெட்டாதீங்க:

அவர் பேசியதாவது, “ முதலில் இந்திய அணியை நான் பாராட்டுகிறேன். மிகவும் சிறப்பாக ஆடினீர்கள். குறிப்பாக, தோனியை பாராட்டுகிறேன். இந்த வெற்றியை கட்டமைத்தவராக இருந்தீர்கள். என்னுடைய கருத்து என்னவென்றால், நீங்கள் இந்த ஹேர்ஸ்டைலில்தான் மிக அழகாக இருக்கிறீர்கள். என்னுடைய கருத்து இந்த முடியை நீங்கள் வெட்டாதீர்கள்.”

இவ்வாறு அவர் பேசினார்.

தோனியின் ஹேர்ஸ்டைல்:

தோனியை இன்று ஒவ்வொரு ஐ.பி.எல். சீசனுக்கும் ஒவ்வொரு ஹேர்ஸ்டைலில் ரசிகர்கள் பார்க்கிறோம். ஆனால், தோனி இந்திய அணிக்கு அறிமுகமானபோது அவர் நீளமான தலைமுடியுடன் இந்திய அணிக்காக களமிறங்கினார். அவரது அதிரடியான பேட்டிங் மட்டுமின்றி அவரது வித்தியாசமான ஹேர்ஸ்டைலும் அவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற வைத்தது. தோனியின் அந்த ஹேர்ஸ்டைல் மிக மிக பிரபலம். 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு தோனி மொட்டை அடித்து தனது புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஷரப் பாராட்டிய அந்த 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கம்பீர் – டிராவிட் தொடக்க வீரராக களமிறங்கினர். கம்பீர் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டிராவிட் 50 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து, ஜோடி சேர்ந்த யுவராஜ் – தோனி ஜோடி இந்திய அணியை இலக்கை நோக்கி முன்னோக்கி நகர்த்துவார்கள்.

யுவராஜ்சிங் நிதானமாக தொடங்கி அதிரடிக்கு மாற, தோனியும் அதிரடி காட்ட இந்திய அணி வெற்றியை நோக்கி நகரும். சிறப்பாக ஆடிய யுவராஜ் சதம் அடித்து அசத்தியிருப்பார். அவர் 93 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருப்பார். தோனி 56 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 77 ரன்கள் எடுத்து அசத்தியிருப்பார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்ட சர்ச்சை: மத்திய - மாநில அரசு எவ்வளவுதான் நிதி கொடுக்கிறாங்க ?
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்ட சர்ச்சை: மத்திய - மாநில அரசு எவ்வளவுதான் நிதி கொடுக்கிறாங்க ?
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்ட சர்ச்சை: மத்திய - மாநில அரசு எவ்வளவுதான் நிதி கொடுக்கிறாங்க ?
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்ட சர்ச்சை: மத்திய - மாநில அரசு எவ்வளவுதான் நிதி கொடுக்கிறாங்க ?
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல" அடித்து சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
"ஈரான் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல் நடத்துங்க" ஐடியா கொடுத்த டிரம்ப்.. பேரழிவை நோக்கி இஸ்ரேல்?
இசிஆரில் கொடூரம்.... தோழி உயிரை காவு வாங்கிய பேருந்து... பயத்தில் இளைஞர் தற்கொலை
இசிஆரில் கொடூரம்.... தோழி உயிரை காவு வாங்கிய பேருந்து... பயத்தில் இளைஞர் தற்கொலை
Embed widget