மேலும் அறிய

PAK vs SL Asia Cup Final : பனுகா ராஜபக்சே மிரட்டல் பேட்டிங்..! ஆசிய கோப்பையை வெல்ல 171 ரன்கள் பாகிஸ்தானுக்கு இலக்கு..!

பனுகா ராஜபக்சேவின் மிரட்டலான அரைசதம், ஹசரங்காவின் அதிரடி பேட்டிங்கால் பாகிஸ்தான் அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

PAK vs SL Asia Cup Final : பனுகா ராஜபக்சே மிரட்டல் பேட்டிங்..! ஆசிய கோப்பையை வெல்ல 171 ரன்கள் பாகிஸ்தானுக்கு இலக்கு..!

முதல் ஓவரிலே நசீம்ஷா பந்தில் குசல் மெண்டிஸ் தான் சந்தித்த முதல் பந்திலே கோல்டன் டக் அவுட்டாகினார். மற்றொரு தொடக்க வீரர் நிசங்கா 8 ரன்களில் அவுட்டானார். நான்காவது நிலையில் களமிறங்கிய குணதிலகா 1 ரன்னில் ஆட்டமிழக்க 36 ரன்களுக்கு இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

தனஞ்செய டி சில்வா மட்டும் பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி சில்வாவும் 21 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் தசுன் சனகாவும் 2 ரன்களில் ஷதாப் கான் பந்தில் போல்டானர். 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.

PAK vs SL Asia Cup Final : பனுகா ராஜபக்சே மிரட்டல் பேட்டிங்..! ஆசிய கோப்பையை வெல்ல 171 ரன்கள் பாகிஸ்தானுக்கு இலக்கு..!

இதையடுத்து, 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹசரங்கா – பனுகா ராஜபக்சே இலங்கை அணியை மீட்டனர். முதல் பந்திலே பவுண்டரியுடன் தொடங்கிய ஹசரங்கா அதிரடியாக ஆடினார். பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பந்துகளை ஹசரங்கா விளாசினார். இதனால் இலங்கை அணி 100 ரன்களை கடந்தது. இலங்கை அணி  116 ரன்களை எட்டியபோது அதிரடியாக ஆடிய ஹசரங்கா ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் இலங்கையின் பனுகா ராஜபக்சே அதிரடி காட்டினார். அவர் 35 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் அளித்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் வீணடித்தனர். கடைசி ஓவரின் இரு பந்துகளை பவுண்டரி, சிக்ஸருக்கு பனுகா ராஜபக்சே விளாசினார்.

PAK vs SL Asia Cup Final : பனுகா ராஜபக்சே மிரட்டல் பேட்டிங்..! ஆசிய கோப்பையை வெல்ல 171 ரன்கள் பாகிஸ்தானுக்கு இலக்கு..!

இதனால், 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை விளாசியது. பனுகா ராஜபக்சே 45 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 71 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். கருணரத்னே 1 சிக்ஸருடன் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நசீம் ஷா, முகமது ஹஸ்நையின் ஓவர்களில் அதிக ரன்களை இலங்கை வீரர்கள் விளாசினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget