3rd March In Cricket: மார்ச் 3ல் கிரிக்கெட்டின் மிக முக்கியமான நாள் - ஏனென்று தெரியுமா? இதோ தெரிஞ்சுகோங்க!
2009ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தானின் லாகூரில் போட்டியொன்று விளையாடச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி பேருந்து மீது ஆயுதம் தாங்கிய தாக்குதல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
2006ம் ஆண்டு இதே நாளில் இலங்கை பேட்ஸ்மேன் முத்தையா முரளிதரன் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 1000வது சர்வதேச விக்கெட்டை எடுத்தார். இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
2009: பாகிஸ்தானின் லாகூரில் போட்டியொன்று விளையாடச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி பேருந்து மீது ஆயுதம் தாங்கிய தாக்குதல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
1000 விக்கெட்டுகள்:
கிரிக்கெட் வரலாற்றில் இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். மார்ச் 3ம் தேதியான இன்று கிரிக்கெட்டில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தன. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இலங்கை கிரிக்கெட் அணி சம்பந்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டின் மூன்றாவது மாதத்தின் இந்த மூன்றாம் நாள் இந்த கிரிக்கெட் விளையாட்டின் இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாக உள்ளது. அதனால் கிரிக்கெட்டில் மார்ச் 3ம் தேதி சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி அன்று, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது தனது 1000வது சர்வதேச விக்கெட்டை எடுத்தார். இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றார். கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு பந்து வீச்சாளர்கள் மட்டுமே 1000 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பெயரில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன் தனது பெயரில் 1347 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1000 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே. ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் பந்துவீச்சாளரான ஷேன் வார்னே சர்வதேச கிரிக்கெட்டில் 1001 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு:
இந்த நாளின் இரண்டாவது சம்பவத்தில் இலங்கையும் ஈடுபட்டது தற்செயல் நிகழ்வு. கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் ஒரு போட்டியில் விளையாடச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி பேருந்து மீது ஆயுதம் ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளுக்காக இலங்கை அணி மைதானத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, பேருந்து மீது குறிவைத்து தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து போட்டியும், தொடரும் ரத்து செய்யப்பட்டது.
A Dark Day #OnThisDay in 2009 a bus carrying Sri Lankan cricket team to Lahore's Qaddafi Stadium for Day 3 of their second Test match v Pakistan was targetted by militants.
— Cricketopia (@CricketopiaCom) March 3, 2024
7 people were killed — including 6 policemen, another 20 injured in the attack.pic.twitter.com/3S5FLt8uBx
பாகிஸ்தானில் இலங்கை அணி மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தால் அனைவரும் பீதியடைந்தனர். இதன் பிறகு, எந்தவொரு கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் செய்து விளையாட விரும்பவில்லை. எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் எவரும் உயிர் இழக்கவில்லை என்பது நல்ல விஷயம். இருப்பினும் சில வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதற்குப் பிறகு, பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.