On This Day 2002: ’அப்படி ஒரு வெறி தாதாவுக்கு..’ நாட்வெஸ்ட் சீரிஸில் கங்குலி இங்கிலாந்தை பழிதீர்த்த கதை!
2002 ஆம் ஆண்டு இதே நாளில், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் ட்ரை-சீரிஸை வென்றதன் மூலம், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி கெத்து காட்டியது.
2002 ஆம் ஆண்டு இதே நாளில், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் ட்ரை-சீரிஸை வென்றதன் மூலம், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி கெத்து காட்டியது. இது தற்போது வரை வெளிநாடுகளில் இந்திய அணியின் மிகச்சிறந்த வெற்றிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நாட்வெஸ்ட் ட்ரை சீரிஸில் இந்தியா, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடியது. நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு தோல்வியுடன் இந்திய அணி 19 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தது. ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றிபெற்ற இலங்கை அணி, 5 தோல்விகளுடன் கடைசி பிடித்தது.
அதன்படி, இந்தியா ஒரு முறை இங்கிலாந்தையும், இலங்கையை மூன்று முறையும், இங்கிலாந்து இலங்கையை இரண்டு முறையும், இந்தியாவை ஒரு முறையும் தோற்கடித்தன.
முதல் இடங்களை பிடித்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி 2022 ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி இறுதிப்போட்டியில் விளையாடியது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, மார்கஸ் ட்ரெஸ்கோதிக், நிக் நைட், கேப்டன் நசீர் ஹுசைன், மைக்கேல் வாகன், ஆண்ட்ரே பிளின்டாஃப், டேரன் கோஃப் ஆகியோர் இங்கிலாந்து அணியில் தூண்களாக இருந்தனர்.
இந்திய அணியில் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் போன்ற இளம் படையுடன் சச்சின் டெண்டுல்கர், கேப்டன் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் அனில் கும்ப்ளே ஆகிய அனுபவ வீரர்களும் களமிறங்கினர்.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் நசீர் 128 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 115 ரன்களும், மார்கஸ் ட்ரெஸ்கோதிக் 100 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 109 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்தது. ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் 32 பந்துகளில் 40 ரன்களை விளாசினார்.
இந்திய அணி சார்பில் ஜாகீர் கான் 3 விக்கெட்களும், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் அனில் கும்ப்ளே தலா 1 விக்கெட்களும் வீழ்த்தியிருந்தனர்.
Yuvi-Kaif show #ONTHISDAY 13-07-2002. 🇮🇳 returned to Lord's for another, no less astonishing, victory against 🇬🇧 in final of NatWest Series. 🇮🇳 146 for 5 chasing 326 for victory then @YUVSTRONG12 & @MohammadKaif added 121 before Kaif sealed a 2 wicket winpic.twitter.com/OeRhxme52b
— Zohaib (Cricket King)🇵🇰🏏 (@Zohaib1981) July 13, 2023
326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களான சேவாக் 49 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், கங்குலி 43 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 60 ரன்களும் எடுத்தது. இதன்மூலம், 15 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்து கெத்து காட்டியது.
அதன்பிறகு களமிறங்கிய சச்சின் 14 ரன்களுடன் நடையைகட்ட, டிராவிட்டும் 5 ரன்களுடன் ஏமாற்றம் அளித்தார். 24 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களுடன் தடுமாறிய நிலையில், அப்போதைய இளம் வீரர்கள் யுவராஜ் மற்றும் முகமது கைஃப் பொறுப்புடன் விளையாடி இந்தியா 250 ரன்களைக் கடக்க உதவி செய்தனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்க்க, ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் யுவராஜை 69 ரன்களில் வெளியேற்றி காலிங்வுட் அதிர்ச்சி அளித்தார்.
உள்ளே வந்த ஹர்பஜன் சிங் அதிரடியாக 15 ரன்கள் சேர்க்க, இவருடன் முகமது கைஃப் அரைசதம் அடித்து போராடினார். பின்னே வந்த அனில் கும்ளே ரன் ஏதுமின்றி வெளியேற, இந்திய கடைசி 3 பந்துகளை மீதம் வைத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. முகமது கைஃப் கடைசி வரை அவுட்டாகாமல் 75 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 87 ரன்கள் குவித்து இந்தியாவின் ஹீரோவாக ஜொலித்தார்.
இரானி, கில்ஸ் மற்றும் பிளின்டாஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டனாக இருந்த கங்குலி லார்ட் மைதான பால்கனியில் நின்று தனது டீ சர்ட்டை கழற்றி சுழற்றியது இன்னும் யாராலும் மறக்க முடியாத ஒரு நினைவு.