ODI World Cup 2023 Ikram Alikhil: இங்கிலாந்தை பந்தாடிய இளம் வீரர்! யார் இந்த இக்ராம் அலிகில்?
இங்கிலாந்து அணிக்காக எதிரான போட்டியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய இக்ராம் அலிகில் குறித்தான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
உலகக் கோப்பை கிர்க்கெட் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை மொத்தம் 13 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.
குர்பாஸ் மிரட்டல்:
அதில் நேற்று (அக்டோபர் 15) நடைபெற்ற போட்டியில் நடப்பு உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முன்னதாக, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதனத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினர்.
அதில், ரஹ்மானுல்லா குர்பாஸ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 59 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 80 ரன்கள் குவித்தார்.
ஆப்கானை மீட்ட இக்ரம்:
பின்னர், வந்த வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழக்க, ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட்ட் கீப்பரும் அந்த அணியின் இளம் வீரருமான இக்ராம் அலிகில் களமிறங்கி சரிவில் இருந்த் ஆப்கானிஸ்தான் அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார்.
அதன்படி, 66 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 58 ரன்கள் அடித்து அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். இதனிடையா யார் இவர் என்று ரசிகர்கள் இணையத்தில் தேடத்தொடங்கி விட்டனர்.
யார் இந்த இக்ராம் அலிகில்:
23 வயதே ஆன இக்ராம் அலிகில் கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி பிறந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக தன்னுடைய ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அதேபோல் மார்ச் 15 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியிலும் அயர்லாந்து அணிக்கு எதிராகத்தான் அறிமுகமானர் இக்ராம் அலிகில்.
2017 ஷ்பஜீஸா கிரிக்கெட் லீக்கில் பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் அணிக்காக தனது முதல் இருபது ஓவர் போட்டியில் விளையாடத் தொடங்கினார்.
சாதனை:
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் அசத்தினார். தொடந்து இது போன்ற போட்டிகளில் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக வெளிபடுத்தினார். இதனால், 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.
அந்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதால் இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இக்ராம் அலிகில்லுக்கு ஆப்கானிஸ்தான் அணியில் இடம் கிடைதத்து.
இச்சூழலில் தான் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அரைசதம் அடித்து கலக்கி உள்ளார் இக்ராம் அலிகில்.
புள்ளிவிவரங்கள்:
15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 296 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 3 அரைசதங்கள் அடங்கும். அதேபோல், அவர் விளையாடி உள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் 7 ரன்கள் எடுத்தார்.
மேலும் படிக்க: Cricket In Worldcup: இந்திய ரசிகர்கள் உற்சாகம்..! 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 புதிய விளையாட்டுகள் சேர்ப்பு
மேலும் படிக்க: World Cup 2023 Stats: அதிக ரன்னில் முதலிடத்தில் ரிஸ்வான்.. விக்கெட் வேட்டையில் பும்ரா.. டாப் 10 சிறந்த புள்ளிவிவரங்கள்..!