மேலும் அறிய

Team India WC Squad: கேஎல் ராகுலுக்கு இடம்.. வெளியேற்றப்பட்ட சாம்சன், பிரசித், திலக்.. இன்று வெளியாகும் உலகக் கோப்பை இந்திய அணி!

2023 ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நேற்று இரவு பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் இலங்கை சென்று அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. இதன்போது வருகின்ற உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கண்டியில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை ஆட்டம் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு கைவிடப்பட்டதை தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்தது.  

இந்த அணி தேர்வில் ஒருநாள் உலகக் கோப்பையில் 15 பேர் கொண்ட அணி மட்டுமே ஐசிசி ஏற்றுக்கொள்ளும். அதன் காரணமாக, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடமில்லை என்று தெரிகிறது. அதேசமயம் மீண்டும் கே.எல்.ராகுலை அணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் அனுமதியைப் பெற்ற பிறகு, இன்று அறிவிக்கப்படும் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்தியாவின் தற்காலிக அணியில் கே.எல் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற இருக்கிறாஎ, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் மூன்று போட்டிகளில் 26 சராசரியுடன் 78 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆசியக் கோப்பை அணியில் காத்திருப்பு வீரராக இருந்த சஞ்சு சாம்சன் உலகக் கோப்பைக்கான இந்திய அணி கழட்டிவிட பட்டதை தொடர்ந்து, திலக் வர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் உலகக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை.

இந்திய அணி எப்படி இருக்கும்..?

கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசையை பலப்படுத்துவார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக மிடில் ஆர்டர் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

அணியிம் தேர்வு தன்மையை பார்த்தால் இந்திய அணி அதிகம் பேட்டிங் ஆர்டரை நம்புவதாக அறியப்படுகிறது. பந்துவீச்சு பிரிவில், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்குவார்கள். அதேநேரத்தில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் அணியில் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

2019 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக 7 போட்டிகளில் விளையாடி, 6 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப்புக்கு இது இரண்டாவது உலகக் கோப்பையாகும். குல்தீப் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 11 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். குல்தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்தியாவின் முதல் தேர்வு சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். இந்திய அணியின் அனுபவமிக்க ரவிசந்திர அஷ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

2023 உலகக் கோப்பைக்கான இந்தியத் தற்காலிக அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், குல்தீப் யாதவ் ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Embed widget