ODI World Cup 2023: கசிந்த உலகக்கோப்பை அட்டவணை.. 10 நாடுகள், 48 போட்டிகள்.. இந்திய அணி எங்கே? எப்போது? யாருடன் மோதுகிறது..?
உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த வரைவு அட்டவணை அனைத்து நாடுகளுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
2011 ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியானது இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு வங்கதேசம் மற்றும் இலங்கையுடன் இணைந்து இருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. ஆனால், இம்முறை ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா மட்டுமே தனியாக நடத்துகிறது.
இந்த போட்டியானது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் உள்ளதாகவும், இதற்கான உலகக் கோப்பைக்கான அட்டவணையை பிசிசிஐ தயாரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இந்த வரைவு அட்டவணையின்படி, உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த வரைவு அட்டவணை அனைத்து நாடுகளுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிடும். அதன்படி, உலகக் கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதியும் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்த இரண்டு அணிகளும்தான் மோதியது.
அக்டோபர் 15ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் மோத இருப்பதாகவும், இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிகிறது. மேலும், உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறலாம்.
இந்தாண்டு முதன்முறையாக உலகக் கோப்பை போட்டிகள் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 29ம் தேதி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த மைதானத்தில் நடைபெறலாம். உலகக் கோப்பைக்காக ஏகானா மைதானத்தில் புதிய பிட்ச் உருவாக்கப்பட்டது. கான்பூருக்கு பிறகு, உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ இரண்டாவது நகரமாக இருக்கும்.
இந்திய அணி எங்கே? எப்போது? யாருடன் மோதுகிறது..?
ஒருநாள் உலகக் கோப்பை குரூப் ஸ்டேஜில் இந்திய அணி மொத்தம் 9 லீக் போட்டிகளில் விளையாடும் என்றும், இதில் முதல் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மோத இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரைவு அட்டவணை: (அதிகாரப்பூர்வ அட்டவணை கிடையாது)
- இந்தியா vs ஆஸ்திரேலியா - அக்டோபர் 8, சென்னை
- இந்தியா vs ஆப்கானிஸ்தான் - அக்டோபர் 11, டெல்லி
- இந்தியா vs பாகிஸ்தான் - அக்டோபர் 15
- இந்தியா vs வங்கதேசம் - அக்டோபர் 19, புனே
- இந்தியா vs நியூசிலாந்து - அக்டோபர் 22, தர்மசாலா
- இந்தியா vs இங்கிலாந்து - அக்டோபர் 29, லக்னோ
- இந்தியா vs தகுதிச் சுற்று - நவம்பர் 2, மும்பை
- இந்தியா vs தென்னாப்பிரிக்கா - நவம்பர் 5, கொல்கத்தா
- இந்தியா vs தகுதிச் சுற்று - நவம்பர் 11, பெங்களூரு