(Source: ECI/ABP News/ABP Majha)
Fast Bowlers: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒப்பிடப்படும் இந்திய அணி.. எதிரணியை துவம்சம் செய்யும் பும்ரா, ஷமி..!
’சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று அழைக்கப்படும் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூட, இந்திய அணியின் பந்துவீச்சை 70 மற்றும் 80 களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒப்பிட்டுள்ளார்.
2023 உலகக் கோப்பையின் தொடக்கத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது சிறப்பான பந்துவீச்சால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் உலகின் அனைத்து டாப் அணிகளின் முதுகு எலும்புகளையும் உடைத்துள்ளனர். இந்த உலகக் கோப்பையில், இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் புயல் வேக பந்துவீச்சால் எதிரணி பேட்டிங் வரிசையையே அழிக்கும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் இத்தகைய பந்துவீச்சு, உலகெங்கிலும் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்திய நிலையில், 80’ஸ் களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு வரிசையின் நினைவுகளை நினைவு படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை உலகம் முழுவதும் பாராட்டிய காலம் ஒன்று இருந்தது. ஹோல்டிங், டேனியல், ஜூலியன், வி ஹோல்டர் போன்ற கில்லாடி பந்துவீச்சாளர்களுக்கு முன்னால் எந்த அணியும், எந்த வீரரும் நடுங்குவார்கள். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் களம் இறங்கியதும், எதிரணி அணி 100 ரன்களைக் கூட எடுப்பது கடினம். இம்முறை நடந்த உலகக் கோப்பையிலும் இதே போன்ற ஒரு நிகழ்வை இந்திய அணியில் காணலாம்.
’சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று அழைக்கப்படும் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூட, இந்திய அணியின் பந்துவீச்சை 70 மற்றும் 80 களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒப்பிட்டுள்ளார்.
100 ரன்களுக்குள் சுருண்ட இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா:
கடந்த நவம்பர் 2ம் தேதி இந்தியா மற்றும் இலங்கை இடையே உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்தப் போட்டியின் சிறப்பு என்னவென்றால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இலங்கையை 55 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.
இந்த போட்டிக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, கடந்த நவம்பர் 5ம் தேதி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் ஒருதலைப்பட்ச வெற்றியைப் பதிவு செய்தது. தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில், ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பந்துவீச்சில் ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்க அணியையும் வெறும் 83 ரன்களுக்குச் சுருண்டது.
வேகத்தால் வீழ்ந்த எதிரணிகள்:
2023 உலகக் கோப்பையில் இந்திய பந்துவீச்சாளர்களான பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகிய மூவரும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கத்தை நினைவூட்டுகிறது. 70களில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களைக் கண்டு மற்ற வீரர்கள் மிகவும் பயந்தனர். கடந்த 1976-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோல்டிங், டேனியல், ஜூலியன், வி ஹோல்டர் போன்ற பந்துவீச்சாளர்கள் முன் இந்திய அணி நடுங்கியது.
இந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள அப்போதைய இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி தனது வீரர்களின் உயிரைக் காப்பாற்ற நான்காவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களையும் டிக்ளேர் செய்தார். காயம் ஏற்படாமல் இருக்க அவரே களத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் பற்றி தெரிந்து கொள்வோம்...
மைக்கேல் ஹோல்டிங்: மைக்கேல் ஹோல்டிங் வீசிய பந்து, நெருப்புப் பந்தைப் போல காதுகளுக்கு அருகில் விசில் அடித்துகொண்டே வெளியே வருமாம். கடந்த 1975 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த மைக்கேல் ஹோல்டிங்கால் வெஸ்ட் இண்டீஸ் அணி வலிமை பெற்றது. மைக்கேல் ஹோல்டிங் மொத்தம் 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 249 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதே நேரத்தில் அவர் 102 ஒருநாள் போட்டிகளில் 142 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஹோல்டிங் ஒரு இன்னிங்ஸில் 13 முறை ஐந்து விக்கெட்டுகளையும், இரண்டு முறை அவர் ஒரே இன்னிங்ஸில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனையை படைத்துள்ளார்.
மால்கம் மார்ஷல்: புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் மார்ஷல் நவம்பர் 4, 1999 அன்று தனது இறுதி மூச்சை விட்டபோது, கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு சகாப்தம் முடிவுக்கு வந்தது என்று கூறப்பட்டது. 1983 முதல் 1991 வரை, உலகெங்கிலும் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு பயத்தின் இரண்டாவது பெயராக இருந்தவர் மார்ஷல்.
மால்கம் மார்ஷல் தனது 13 வருட சர்வதேச வாழ்க்கையில் சுமார் எட்டு ஆண்டுகள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். ஆனால் இந்த எட்டு ஆண்டுகளில், அவர் உலகம் முழுவதும் அவரைப் பற்றிய பயமே எதிரணிகளிடம் இருந்தது.
1991 ஆம் ஆண்டு மார்ஷல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் போது, அவர் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 376 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இந்த புள்ளிவிவரங்கள் மூலமே மார்ஷல் எவ்வளவு ஆபத்தான பந்துவீச்சாளர் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஜோயல் கார்னர்: 1980 காலக்கட்டத்தில் ஜோயல் கார்னரும் ஒரு வேக பந்து வீச்சாளராக ஜொலித்தார். அவருக்கு எதிராக உலகின் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் முழு மனதுடன் பேட் செய்ய வரமாட்டார்களாம். ஜோயல் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 58 டெஸ்ட் போட்டிகளில் 259 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் 146 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் எகானமி வெறும் 3.09 மட்டுமே ஆகும். இதுதான் தற்போது வரை உலகிலேயே சிறந்த எகானமியாக உள்ளது. ஜோயல் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன பிறகும் இந்த சாதனை இன்றும் உள்ளது.
கொலின் கிராஃப்ட்: கிராஃப்ட் 70கள் மற்றும் 80களின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களின் சக்திவாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் நால்வர் குழுவின் ஒரு ஆளாக இருந்தார். அவரது பவுன்சர் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. கொலின் கிராஃப்ட் 27 போட்டிகளில் 125 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போது இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜஸ்பிரித் பும்ரா: இந்தியாவில் 2023 உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் ஜஸ்பிரித் பும்ரா மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் 6 போட்டிகளில் 15.07 என்ற சிறந்த சராசரியுடன் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டிகளில் அவரது எகானமி 3.91 மட்டுமே. இது தவிர, இந்த உலகக் கோப்பையில் பும்ராவின் சிறந்த ஆட்டம் 4/39.
2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இவர் இதுவரை 84 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 23.40 சராசரியில் 143 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முகமது ஷமி: 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முகமது ஷமி ஆறாவது இடத்தில் உள்ளார். இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் இந்த மூன்று போட்டிகளிலும் 6.71 என்ற சிறந்த சராசரியுடன் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருமுறை 4 விக்கெட்டுகளையும், இரண்டு முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
முகமது சிராஜ்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் 9 ஓவர்களில் 76 ரன்கள் விட்டுகொடுத்து எந்த விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக முகமது சிராஜ் 8 ஓவரில் 50 ரன்களுக்கு 2 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். இதன்பின், வங்கதேசத்துக்கு எதிராக, முகமது சிராஜ் 10 ஓவர்களில் 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜின் 10 ஓவர்களில் 45 ரன்கள் விட்டுகொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தார்.