Virat Kohli: கிங் ஆஃப் ரன் சேஸ்.. அதிக ரன்கள்.. அதிக கேட்சுகள்.. ஐசிசி போட்டிகளில் புதிய சாதனையை படைத்த விராட் கோலி..!
நேற்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ’கிங்’ கோலி 95 ரன்கள் குவித்து தனது பெயரில் இந்த சிறப்பு சாதனையை படைத்துள்ளார்.
ஐசிசி வரையறுக்கப்பட்ட ஓவர்கள் போட்டியில் (50 ஓவர் மற்றும் டி20 ஓவர்கள்) அதிக ரன்கள் குவித்து புதிய சாதனையை தனது பெயரில் எழுதினார் விராட் கோலி. மொத்தமாக கோலி 3,000 ரன்களை எடுத்து ஆதிக்கம் செலுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெய்லை முந்தியுள்ளார்.
ஐசிசி வரையறுக்கப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் கெய்ல் 2942 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். நேற்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ’கிங்’ கோலி 95 ரன்கள் குவித்து தனது பெயரில் இந்த சிறப்பு சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக 2023 ஒருநாள் உலகக் கோப்பையில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், ரன்களை விரட்டும் போது சதம் அடித்து கோலி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 97 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 85 ரன்களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 55 ரன்களும் எடுத்தார். நேற்று, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரன்களைத் துரத்தும்போது, தனது 49வது சதத்தை தவறவிட்ட அவர் 104 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 95 ரன்கள் எடுத்தார்.
𝗘𝗮𝘁 ➡️ 𝗦𝗹𝗲𝗲𝗽 ➡️ 𝗕𝗿𝗲𝗮𝗸 𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝘀 ➡️ 𝗥𝗲𝗽𝗲𝗮𝘁 🔃
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 22, 2023
The first player to score 3⃣0⃣0⃣0⃣ runs in ICC white ball tournaments 🏔️#PlayBold #INDvNZ #CWC23 #ViratKohli pic.twitter.com/IdnRshxAkD
ஒருநாள் போட்டியில் 150 கேட்சுகள்:
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மார்க் சாம்ப்மேன் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரின் கேட்சுகளை கோலி பிடித்து அவர்களை அவுட் செய்தர். இந்த கேட்சு மூலம் அவர் தனது ஒருநாள் போட்டிகளில் 150 பேட்சுகளை பூர்த்தி செய்தார். இதன்மூலம், 50 ஓவர் போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்த நான்காவது வீரர் விராட் கோலி என்ற சாதனையையும் படைத்தார்.
இதுதான் விராட் கோலி..!
கோஹ்லி 2008 இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு அவர் 111 டெஸ்ட், 285 ஒருநாள் மற்றும் 115 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 187 டெஸ்ட் இன்னிங்ஸ்களில், அவர் 49.29 சராசரியில் 8,676 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 29 சதங்கள் மற்றும் 29 அரை சதங்கள் அடங்கும்.
இது தவிர, ஒருநாள் போட்டியில் 273 இன்னிங்ஸ்களில், 48 சதங்கள் மற்றும் 68 அரை சதங்கள் உட்பட 58 சராசரியுடன் 13,342 ரன்கள் எடுத்துள்ளார். டி20 சர்வதேசப் போட்டிகளில், இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி சராசரியாக 52.73 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 137.96 இல் 4008 ரன்கள் எடுத்துள்ளார், அதில் அவர் 1 சதம் மற்றும் 37 அரை சதங்கள் அடித்துள்ளார்.
கிங் ஆஃப் ரன் சேஸ்:
இந்திய அணிக்காக விராட் கோலி 96 இன்னிங்ஸ்களில் சேஸ் செய்து வெற்றியை பெற உதவியுள்ளார். கோலி சேஸ் செய்து வெற்றிபெற்றபோது, அவர் 23 சதமும், 25 அரை சதமும் அடித்துள்ளார். இதற்காகவே அவர் கிங் ஆஃப் சேஸ் என்று அழைக்கப்படுகிறார்.
கோலி முதலிடம்:
இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் விராட்கோலி (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 354 ரன்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (311 ரன்) உள்ளார்.