ODI World Cup 2023: இறுதிப்போட்டியை நெருங்கும் 2023 உலகக்கோப்பை.. இதுவரை யார் யார் டாப்..? லிஸ்ட் இதோ!
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 50வது ஒருநாள் சதத்தை விளாசிய இந்திய வீரர் விராட் கோலி, உலகக்கோப்பை 2023ல் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

உலகக் கோப்பை 2023ல் அதிக ரன்கள் அடித்த மற்றும் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, முகமது ஷமி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை முகமது ஷமி படைத்தார்.
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி 7 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம், உலகக் கோப்பை 2023ல் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா 9 போட்டிகளில் 22 விக்கெட்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், தில்சன் மதுஷங்க 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:
| பந்து வீச்சாளர்கள் | போட்டிகள் | விக்கெட்டுகள் | எகானமி | சராசரி | சிறந்த பந்துவீச்சு |
| முகமது ஷமி (IND) | 6 | 23 | 5.01 | 9.13 | 7/57 |
| ஆடம் ஜம்பா (AUS) | 9 | 22 | 5.26 | 18.90 | 4/8 |
| தில்ஷான் மதுஷங்க (SL) | 9 | 21 | 6.70 | 25.00 | 5/80 |
| ஜஸ்பிரித் பும்ரா (IND) | 10 | 18 | 3.98 | 18.33 | 4/39 |
| ஜெரால்ட் கோட்ஸி (SA) | 7 | 18 | 6.40 | 19.38 | 4/44 |
| ஷஹீன் அப்ரிடி (PAK) | 9 | 18 | 5.93 | 26.72 | 5/54 |
| மார்கோ ஜான்சன் (SA) | 8 | 17 | 6.41 | 24.41 | 3/31 |
| ரவீந்திர ஜடேஜா (IND) | 10 | 16 | 4.25 | 22.18 | 5/33 |
| மிட்செல் சான்ட்னர் (NZ) | 10 | 16 | 4.84 | 28.06 | 5/59 |
| பாஸ் டி லீடே (NED) | 9 | 16 | 7.26 | 30.43 | 4/62 |
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 50வது ஒருநாள் சதத்தை விளாசிய இந்திய வீரர் விராட் கோலி, உலகக்கோப்பை 2023ல் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இப்போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் இரண்டாவது இடத்திலும், ரச்சின் ரவீந்திரா மற்றும் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:
| பேட்ஸ்மேன்கள் | போட்டிகள் | ரன்கள் | சராசரி | ஸ்ட்ரைக் ரேட் | அதிகபட்ச ஸ்கோர் |
| விராட் கோலி (IND) | 10 | 711 | 101.57 | 90.68 | 117 |
| குயின்டன் டி காக் (SA) | 9 | 591 | 65.66 | 109.24 | 174 |
| ரச்சின் ரவீந்திரா (NZ) | 10 | 578 | 64.22 | 106.44 | 123* |
| டேரில் மிட்செல் (NZ) | 10 | 552 | 69.00 | 111.06 | 134 |
| ரோஹித் சர்மா (இந்தியா) | 10 | 550 | 55.00 | 124.15 | 131 |
| ஷ்ரேயாஸ் ஐயர் (IND) | 10 | 526 | 75.14 | 113.11 | 128* |
| டேவிட் வார்னர் (AUS) | 9 | 499 | 55.44 | 105.49 | 163 |
| ரஸ்ஸி வான் டெர் டுசென் (SA) | 9 | 442 | 55.25 | 88.57 | 133 |
| மிட்செல் மார்ஷ் (AUS) | 8 | 426 | 60.85 | 109.51 | 177* |
| டேவிட் மாலன் (ENG) | 9 | 404 | 44.88 | 101.00 | 140 |
ஒரு உலகக் கோப்பை பதிவில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல்: விராட் கோலி முதலிடம்
கடந்த ஒருநாள் உலகக் கோப்பைகளில் ஒரே பதிப்பில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறினார்.
| வீரர்கள் | ரன்கள் | ஆண்டு | இன்னிங்ஸ் | அதிகபட்ச ஸ்கோர் |
| விராட் கோலி (IND) | 711 | 2023 | 10 | 117 |
| சச்சின் டெண்டுல்கர் (IND) | 673 | 2003 | 11 | 152 |
| மேத்யூ ஹைடன் (AUS) | 659 | 2007 | 10 | 158 |
| ரோஹித் ஷர்மா (இந்தியா) | 648 | 2019 | 9 | 140 |
| டேவிட் வார்னர் (AUS) | 647 | 2019 | 10 | 166 |
| ஷாகிப் அல் ஹசன் (BAN) | 606 | 2019 | 8 | 124* |
| குயின்டன் டி காக் (SA) | 591 | 2023 | 9 | 174 |
| கேன் வில்லியம்சன் (NZ) | 578 | 2019 | 9 | 148 |
| ரச்சின் ரவீந்திரா (NZ) | 565 | 2023 | 9 | 123* |
| ஜோ ரூட் (ENG) | 556 | 2019 | 11 | 107 |
| டேரில் மிட்செல் (NZ) | 552 | 2023 | 9 | 134 |
| ரோஹித் ஷர்மா (IND) | 550 | 2023 | 10 | 131 |
| மஹேல ஜெயவர்தன (SL) | 548 | 2007 | 11 | 115* |
| மார்ட்டின் குப்டில் (NZ) | 547 | 2015 | 9 | 237* |
| குமார் சங்கக்கார (SL) | 541 | 2015 | 7 | 124 |
| ரிக்கி பாண்டிங் (AUS) | 539 | 2007 | 9 | 113 |
| ஜானி பேர்ஸ்டோ (ENG) | 532 | 2019 | 11 | 111 |
| ஷ்ரேயாஸ் ஐயர் (IND) | 526 | 2023 | 10 | 128* |
| சச்சின் டெண்டுல்கர் (IND) | 523 | 1996 | 7 | 137 |
| ஆரோன் பின்ச் (AUS) | 507 | 2019 | 10 | 153 |
| திலகரத்ன தில்ஷன் (SL) | 500 | 2011 | 9 | 144 |




















