Pay Parity: வரலாற்றில் முதல்முறை.. ஆடவர், மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே சம்பளம்.. முழு விவரம் இதோ..
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் வீராங்கனைகளுக்கு புதிய ஊதியம் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.
![Pay Parity: வரலாற்றில் முதல்முறை.. ஆடவர், மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே சம்பளம்.. முழு விவரம் இதோ.. NewZealand Cricket announces pay parity male and female cricketers in a historic Moment Pay Parity: வரலாற்றில் முதல்முறை.. ஆடவர், மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே சம்பளம்.. முழு விவரம் இதோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/05/fb97065f92c6e0379980fb92780b18001657033540_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகிலுள்ள மற்ற பணிகளை கிரிக்கெட் உலகிலும் வீரர்களுக்கு கிடைக்கும் ஊதியம் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கிடைப்பதில்லை. இது தொடர்பாக பல முறை குரல் எழுப்பப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு முடிவு எடுத்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தம்:
அதன்படி இனிமேல் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு ஒரே ஊதியம் என்ற முடிவை அறிவித்துள்ளது. இது தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தப் புதிய ஒப்பந்தத்தின் படி உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களுக்கு கொடுக்கப்படும் அதே ஊதியம் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Standing together 🏏#CricketNation #Cricket pic.twitter.com/j7TJoOqA9e
— BLACKCAPS (@BLACKCAPS) July 5, 2022
மேலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான மகளிர் வீராங்கனைகள் ஒப்பந்த எண்ணிக்கை 54ல் இருந்து 72ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தக்கவைப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் டேவிட் ஒயிட், “இது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு. இந்த முடிவு நியூசிலாந்தில் மேலும் கிரிக்கெட் வளர்ச்சி அடைய உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா கிரிக்கெட்டில் நிலவும் வீரர்-வீராங்கனை ஊதிய பாகுபாடு:
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை வீரர்களுக்கு கொடுக்கப்பட்டும் வரும் ஊதியம் மிகவும் அதிகமான ஒன்று. மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளுக்கு அதில் பாதி அளவுக் கூட ஊதியமில்லை. உதாரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் ஏ பிரிவு ஒப்பந்த வீரர்களுக்கு போட்டி ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. அதேபோன்று மகளிர் வீராங்கனைகளில் ஏ பிரிவு ஒப்பந்தம் கொண்டவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மட்டுமே ஊதியமாக தரப்படுகிறது.
பி பிரிவு ஒப்பந்த வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அதே பிரிவு வீராங்கனைகளுக்கு போட்டி ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊதிய பாகுபாடு நிலவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)