IRE vs NZ: நியூசிலாந்து அணியை ஓட விட்ட அயர்லாந்து அணி... கடைசியில் நடந்த எதிர்பாராத சம்பவம்
முதலில் நடைபெற்ற முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
![IRE vs NZ: நியூசிலாந்து அணியை ஓட விட்ட அயர்லாந்து அணி... கடைசியில் நடந்த எதிர்பாராத சம்பவம் New Zealand defeat Ireland by 1 run to sweep the ODI series IRE vs NZ: நியூசிலாந்து அணியை ஓட விட்ட அயர்லாந்து அணி... கடைசியில் நடந்த எதிர்பாராத சம்பவம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/16/08557af6d895c9c045aeaa9b4dc347cc1657950457_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சர்வதேச அணிகளுடன் ஒப்பிடும் போது நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல நியூசிலாந்து - அயர்லாந்து இடையிலான ஆட்டம் அமைந்துள்ளது.
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனிடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களம் கண்ட அந்த அணி வீரர்கள் அயர்லாந்து பந்துவீச்சை விளாசி தள்ளினர். சிறப்பாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் மார்டின் குப்தில் 115 ரன்கள் குவித்தார். பின்னால் வந்த வீரர்களில் ஹென்றி நிக்கோல்ஸ் 79 ரன்கள் விளாச நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் அயர்லாந்து வீரர் ஜோஸ்வா லிட்டில் 84 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
WHAT. A. GAME! 🤯
— ICC (@ICC) July 16, 2022
New Zealand maintain their perfect record in the @CricketWorldCup Super League after a last-ball thriller against Ireland.#IREvNZ pic.twitter.com/xFhG0wJfsv
இவ்வளவு ரன்கள் குவித்ததால் நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர். எதிர்பார்த்தது நடந்தாலும் களத்தில் எதிர்பாராத ஒரு சம்பவமும் நடைபெற்றது. ஆம் அயர்லாந்து அணி நியூசிலாந்து பந்து வீச்சை பிரித்து மேய்ந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்ட்ரிலிங் 120 ரன்களும், ஹாரி டெக்டர் 108 ரன்களும் எடுத்தனர். இதனால் வெற்றி யாருக்கு என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எகிறியது. கடைசி 2 ஓவரில் அயர்லாந்து அணி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த அணியால் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் ஒரு ரன்னில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-0 என நியூசிலாந்து அணி கைப்பற்றியது. 115 ரன்கள் குவித்த மார்ட்டின் குப்திலுக்கு ஆட்டநாயகன் விருதும், தொடர் நாயகன் விருது மைக்கேல் பிரேஸ்வெலுக்கும் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)