யார் ஆதரவு யாருக்கு..? ட்விட்டரில் ட்ரெண்டாகும் கோலி-கங்குலி ரசிகர்களின் வாய்க்கால் தகராறு!
ட்விட்டரில் கோலி ரசிகர்கள் #worldstandwithkohli என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கங்குலி ரசிகர்கள், இவர்களுக்கு நாங்கள் என்ன சலித்தவர்களா என #nationstandwithdada என்ற ஹேஸ்டேக்கை...
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் டி20 தொடரிலும் விளையாட இருக்கிறது. இதற்கான சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தென்னாப்ரிக்கா சென்று கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தங்களை வீரர்கள் தனிமைப்படுத்தி கொண்டனர்.
இந்தநிலையில், இந்த தொடருக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தொடர்ந்து தகவல் வெளியானது. பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகுவதாகவும் செய்திகள் பரவியது.
இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், டி 20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தபோது, பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. என்னுடைய முடிவை மாற்றச்சொல்லி பிசிசிஐ தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இந்த முடிவு சரியானதுதான் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது என்றார்.
We are, because he was 🇮🇳(INDIAN team) @BCCI @SGanguly99 #NationStandsWithDada pic.twitter.com/WPjJgWO2he
— R.Shetty (@DrRShetty1) December 17, 2021
ஆனால், கோலி சொல்லியதற்கு முன்னுக்கு பின் முரணாக பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியது இருந்தாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில், “டி20 கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம் என நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், அவர் கேப்டன் பதவியில் தொடர விரும்பவில்லை” என தெரிவித்தார்.
No Politics in Cricket.@BCCI#WorldStandsWithKohli pic.twitter.com/tXv86Txici
— Rupesh Kokare (@kokare_rupesh) December 17, 2021
இருவரும் கருத்துக்களும் தற்போது ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு இருப்பதால், ட்விட்டரில் கோலி ரசிகர்கள் #worldstandwithkohli என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக களமிறங்கிய கங்குலி ரசிகர்கள், இவர்களுக்கு நாங்கள் என்ன சலித்தவர்களா என்று அவர்களும் #nationstandwithdada என்ற ஹேஸ்டேக்கை சமூக வலைத்தளங்களில் பறக்க விட்டு வருகின்றனர்.
The Man Who Changed the Face and Shape of Indian Cricket
— Maniraj Ganguly (@MGanguly99) December 16, 2021
The Leader who formed team like Sehwag, Yuvraj, Dhoni, Zaheer and Harbhajan
As Bcci President: Made Dravid as Coach, Laxman as NCA Chief and Rohit as Captain for Limited Overs#NationStandsWithDada @SGanguly99 @BCCI pic.twitter.com/Ml1mdVQgpE
இந்த கோலி மற்றும் கங்குலி ரசிகர்கள் இங்கு இப்படி அடித்துக்கொள்ள, பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் அட ஓரமா நின்னு சண்டைபோடுங்கப்பா நாங்க போய் இந்தியா - தென்னாப்ரிக்கா மேட்ச் பாக்குறோம்னு கிளம்பிட்டாங்க.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்