MS Dhoni Sachin Photo: சந்தித்துக் கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள்! புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்!
MS Dhoni Sachin Photo: சச்சின் மற்றும் தோனி ஒரு விளம்பரத்தில் நடிக்க சந்தித்துக் கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
MS Dhoni Sachin Photo: சச்சின் மற்றும் தோனி ஒரு விளம்பரத்தில் நடிக்க சந்தித்துக் கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் ஃபேவரேட் கிரிக்கெட்டர்கள், உலக ஜாம்பவான்கள் என புகழப்படும் சச்சின் தெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் போட்டியின் விளம்பரத்தில் இணைந்து நடிப்பதற்காக சந்தித்துக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
சச்சின் மற்றும் தோனி ஆகியோர் இந்தியாவின் கிரிக்கெட் ஜம்பவான்கள் என்பதைக்காட்டிலும், உலகின் ஃபேவரைட் கிரிக்கெட்டர்கள் எனச் சொல்லலாம். கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் எனும் புகழினைக் கொண்ட சச்சின் தொண்டுல்கர், கேப்டன் கூல் எனப்படும் மகேந்திர சிங் தோனி என இருவருக்குமே உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
இவர்களைப் பற்றி ஏதாவது செய்தி என்றாலே இணையமே தீப்பிடிக்கும் அளவிற்கு அவர்களது ரசிகர்கள் வைரலாக்கிவிடுவார்கள். இந்திய அணிக்காக இருவரும் இணைந்து விளையாடும் போதும், ஐபிஎல் போட்டியில் இருவரும் எதிர் எதிர் போட்டிகளில் விளையாடும் போதும் சரி இருவரின் ஜெர்ஸி நெம்பர், பெயர் போன்றவற்றை தங்களது உடல் முழுவதும் வண்ணம் தீட்டியபடி மைதானத்திற்கு ரசிகர்கள் வந்து, அவர்களின் அன்பினை வெளிப்படுத்துவார்கள். இப்படி சச்சின் மற்றும் தோனி மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் இருவரையும் ஒரே ஃப்ரேமில் பார்ப்பதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அந்த புகைபடத்தில் சச்சின் தெண்டுல்கர் நீல நிற டி- சர்ட்டிலும் தோனி மஞ்சள் நிற டி- சர்ட்டிலும் உள்ளனர். மேலும் இருவரும் மிகவும் தீவிரமாக ஏதோ பேசி வந்த போது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தினை ரசிகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் ஸ்டோரியாகவும், ஸ்டேட்டஸ்டாகவும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் படிக்க.,
Pro Kabaddi Champions : ப்ரோ கபடி சாம்பியன் பட்டத்தை இதுவரை வென்றவர்கள் யார்..? யார்..? தெரியுமா..?