Mohammed Shami: 19வது மாடி.. அதிகாலை 4 மணி! தற்கொலைக்கு முயன்ற முகமது ஷமி! நண்பர் சொன்ன அதிர்ச்சி தகவல்
பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முகமது ஷமி நினைத்ததாக அவருடைய நண்பர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப வாழ்க்கையால் பாதிக்கப்பட்ட ஷமி:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2015 ODI உலகக் கோப்பை, 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர். ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை அதிவேகமாகத் தாண்டிய இந்திய வீரர் ஆவார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு விதமான சாதனைகளை செய்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருடைய முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகவும் பாதிக்கப்பட்டார்.
ஷமியின் நண்பர் கூறிய அதிர்ச்சி தகவல்:
ஜஹான் ஷமி மீது குடும்ப வன்முறைக்காக போலீசில் புகார் அளித்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஷமியின் ஒப்பந்தத்தை சிறிது காலம் நிறுத்து வைத்தது. அந்த நேரத்தில் அவர் மன ரீதியாக கடும் சாவல்களை சந்தித்து வந்தார்.
இந்நிலையில் முகமது ஷமியின் நண்பர் உமேஷ் குமார் என்பவர் கூறியுள்ள தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் பேசுகையில்,"முகமது ஷமி அவர் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையின் போது என் வீட்டில் தான் வசித்து வந்தார்.
அவரது மனைவி அவர் மீது மேட்ச் பிக்ஸிங் புகாரை அளித்ததும் முகமது ஷமி மனமுடைந்து போய்விட்டார். என்னால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் என் நாட்டிற்கு நான் துரோகம் செய்கிறேன் என்ற குற்றச்சாட்டை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று என்னிடம் கூறினார். அதோடு நான் வசித்த 19-வது மாடியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்தார்.
நல்ல வேலை அவர் அந்த முடிவை எடுக்கவில்லை. போலீசார் அவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறிய பின்னர் தான் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்" என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்ணனி பந்து வீச்சாளராக இருக்கும் ஷமி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தாக அவர் நண்பர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதி நேரம் ரசிகர்கள் தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Paris Olympics 2024:அன்று வெள்ளி வென்ற வீராங்கனை.. பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மீரா பாய் சானு!
மேலும் படிக்க: Paris Olympics 2024:பாரீஸ் ஒலிம்பிக்..தங்கம் வெல்ல காத்திருக்கும் லோவ்லினா போர்கோஹைன் மற்றும் நிகத் ஜரீன்!