மேலும் அறிய
மதுரையில் ரூ.350 கோடி மைதானம்.. அவர் உள்ள இறங்கியதும் 360 டிகிரியில் இருந்து வந்த சத்தம் !
மதுரையில் ரூபாய் 350 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தை எம்.எஸ் தோனி திறந்து வைத்தார்.

எம்.எஸ்.தோனி
Source : whatsapp
கரூர் சம்பவம் எதிரொலியாக ஸ்டேடியத்திற்குள் பொதுமக்கள் ரசிகர்கள் செல்ல அனுமதி மறுப்பு- வேலம்மாள் குழும பள்ளி கல்லூரி மாணவர்கள் முன்பாக தோனி பிரம்மாண்ட மதுரை கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார்.
மதுரையில் கிரிக்கெட் மைதானம்
மதுரையில் உள்ள இளைஞர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 2023-ஆம் ஆண்டில் கட்டப்படத் தொடங்கியது. மதுரை சிந்தாமணி ரிங்ரோடு பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனை வளாகம் அருகில் இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2-ஆவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக உருவாகியுள்ளது. இந்த மைதானத்தில் 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் கொண்ட வசதி, இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை, அவர்களுக்கான ஜிம் வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை வசதி, கார் பார்க்கிங் வசதி உள்ளிட்டவையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
தோனி வருகை
இந்த மைதானத்தை இன்று விமான மூலம் மூலம் மதுரை வருகை தந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி திறந்து வைத்தார். மதுரையில் உள்ள இந்த மைதானத்தில் டி.என்.பி.எல், ஐ.பி.எல் மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகள் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தின் எதிரொலியாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஸ்டேடியத்திற்குள் ரசிகர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால்
சிந்தாமணி ரிங் ரோடு நான்கு வழி சாலையில் நின்று கொண்டு, தோனியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் ஏக்கத்தில் நின்று கொண்டிருந்தனர். தோனியின் வருகையை ஒட்டி என்று காலை முதலே மதுரை சிந்தாமணியூர் இங்க ரோடு பகுதியில் ஏராளமான ரசிகர்கள் திரள துவங்கினர்.
தோனியை கண்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்
தென் மாவட்டங்களை இணைக்கும் பிரதான நான்கு வழி சாலையில் இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தின் எதிரொலியாக வேலம்மாள் குழுமத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கிரிக்கெட் ஸ்டேடியத்திற்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திற்குள் தோனியை காண வந்த ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்து திரும்பிச் சென்றனர். விமானம் மூலம் மதுரை வந்த தோனி வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார். பின்னர் வாகனத்தில் அமர்ந்து மைதானத்தை சுற்றி வந்து மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார். தோனியை கண்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
தோனி சொன்னது என்ன
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் தோனி உரையாற்றியபோது...,“இப்படிப்பட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்ட வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் , எதிர்கால கிரிக்கெட் வீரர்களின் கனவுத் தளமாக விளங்கப் போகிறது.
தோனிவந்தது பெருமை
வேலம்மாள் குழும தலைவர் எம்.வி.எம். முத்துராமலிங்கம் கூறும்போது..“இந்த மைதானம் தோனி போன்ற உலக கிரிக்கெட் ஜாம்பவவான் திறந்து வைப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. திறமைக்கு தளம் அமைத்துத்தரும் எங்கள் நோக்கை இது இன்னும் உயர்த்துகிறது. “Making Champions” என்ற நோக்கத்தில் செயல்படும் வேலம்மாள் நிறுவனம், இன்று விளையாட்டு உலகிலும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது” எனவும் பேசினார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement




















