Watch Video: யூசுப் பதானை தள்ளிவிட்ட மிட்செல் ஜான்சன்...! மைதானத்திலே நடந்த மோதல்..! வைரலாகும் வீடியோ..
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ப்ளே ஆஃப் சுற்றில் யூசுப் பதான் மற்றும் ஜான்சன் இடையே சண்டை ஏற்பட்டது.
![Watch Video: யூசுப் பதானை தள்ளிவிட்ட மிட்செல் ஜான்சன்...! மைதானத்திலே நடந்த மோதல்..! வைரலாகும் வீடியோ.. Legends League Cricket 2022 Yusuf Pathan fights with Mitchell Johnson Video goes viral in twitter Watch Video: யூசுப் பதானை தள்ளிவிட்ட மிட்செல் ஜான்சன்...! மைதானத்திலே நடந்த மோதல்..! வைரலாகும் வீடியோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/03/d96d3d859a393c2e203f0aea20a07b0f1664794989702224_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் 4 அணிகளாக பிரிந்து விளையாடின. அவற்றில் கவுதம் காம்பீர் தலைமையிலான இந்தியன் கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் 3 வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. அடுத்ததாக இர்ஃபான் பதான் தலைமையிலான பில்வாரா கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.
இந்நிலையில் நேற்று இந்தியன் கேபிடல்ஸ் மற்றும் பில்வாரா கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ப்ளே ஆஃப் சுற்று போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பில்வாரா கிங்ஸ் அணியில் யூசுப் பதான் டெர்த் ஓவர்களில் சிறப்பாக விளையாடி வந்தார். அப்போது இவருக்கும் இந்தியன் கேபிடல்ஸ் அணியின் வீரர் மிட்சல் ஜான்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Some heated moments between Johnson and Pathan during @llct20 knock-outs. pic.twitter.com/xQR3PtsWuY
— Johns. (@CricCrazyJohns) October 3, 2022
அந்தச் சமயத்தில் யூசுப் பதானை ஒரு கட்டத்தில் மிட்சல் ஜான்சன் தள்ளி விட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: நடப்பாண்டில் வெற்றி மேல் வெற்றி..! டி20 உலககோப்பையை வெல்லுமா இந்தியா..?
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பில்வாரா கிங்ஸ் அணி 226 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய கேபிடல்ஸ் அணியில் ராஸ் டெய்லர் 39 பந்துகளில் 5 சிக்சர் உள்பட 9 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார். ஆஸ்லே நர்ஸ் 28 பந்துகளில் 4 சிக்சர்கள் விளாசி 60 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அசத்தியது. 226 ரன்கள் அடித்தும் இர்ஃபான் பதான் தலைமையிலான பில்வாரா கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. லெஜண்ட்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு காம்பீர் தலைமையிலான இந்தியன் கேபிடல்ஸ் அணி முன்னேறியுள்ளது.
Heated argument between Yusuf Pathan and Mitchell Johnson in @llct20#LegendsLeagueCricketpic.twitter.com/WizMNxbkTy
— 🅒🅡🅘︎🅒︎🄲🅁🄰🅉🅈𝗠𝗥𝗜𝗚𝗨™ 🇮🇳❤️ (@MSDianMrigu) October 3, 2022
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் பில்வாரா கிங்ஸ் அணி அடுத்து எலிமினேட்டர் சுற்றில் மூன்றாம் இடம் பிடித்துள்ள குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்தியன் கேபிடல்ஸ் அணியை எதிர்த்து இறுதிப் போட்டியில் விளையாடும். இறுதிப் போட்டியில் ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டி20 போட்டியிலிருந்து கோலி விலகலா?- காரணம் என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)