(Source: ECI/ABP News/ABP Majha)
Asia Cup 2023: உடற்தகுதி இல்லாத ஒருவரை ஏன் எடுத்தீங்க? மற்ற வீரர்களுக்கு திறமை இல்லையா - ஸ்ரீகாந்த் கடுமையாக சாடல்!
2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியில் கே.எல்.ராகுலை தேர்வு செய்ததற்காக இந்திய தேர்வுக் குழுவை முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.
2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியில் கே.எல்.ராகுலை தேர்வு செய்ததற்காக இந்திய தேர்வுக் குழுவை முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் அஜித் அகர்கர், கே.எல். ராகுல் முழுமையாக இன்னும் உடற்தகுதிபெறவில்லை. இதன் காரணமாக, செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல். ராகுல் விளையாட மாட்டார் என தெரிவித்தார்.
இந்தநிலையில், கே.எல்.ராகுலை தேர்வு செய்தது தவறு என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கே.எல்.ராகுலுக்கு உடற்தகுதி இல்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு உடற்தகுதி இல்லை என்றால் அவரை அணியில் சேர்க்காதீர்கள். தேர்வின் போது ஒரு வீரர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவரை தேர்வு செய்யக்கூடாது. அதுதான் எங்கள் கொள்கை. கே.எல்.ராகுலை உலக கோப்பைக்கு தேர்வு செய்ய விரும்பினால், அவரை உலக கோப்பைக்கு தேர்வு செய்யுங்கள், அது வேறு விஷயம். அவருக்கு பதிலாக வேறு வீரரை தேர்வு செய்யலாம். கே.எல்.ராகுலுக்கு பதிலாகதான் நாங்கள் சஞ்சு சாம்சனை அழைத்து செல்கிறோம் என்று கூறுவது என்ன விதத்தில் நியாயம்..?” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் ஆசிய கோப்பையில் விளையாடுகிறீர்கள். அதுவும் ஒரு முக்கியமான போட்டிதான். கடந்த இரண்டு பதிப்புகளில் இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு கூட தகுதி பெறவில்லை. நீங்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்களது ஆசையும் கூட. நீங்கள் குழப்பத்தில் உள்ளீர்கள். நீங்கள் தேர்வுக் கொள்கை என்று ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும். நான் எந்தக் கிரெடிட்டையும் எடுக்க முயற்சிக்கவில்லை, ஆனால், தேர்வுக்குழுவில் நான் ஒரு அங்கமாக இருந்தபோது இதேபோல் ஒரு சூழல் உருவானது அது என்ன என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
ஒரு டெஸ்ட் போட்டியின் போது எங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டது. அது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. சரியான நேரத்தில் உடல் தகுதி பெற்றால் விளையாடுவேன் என்று விவிஎஸ் லக்ஷ்மண் கூறினார், மேலும் அவரை அணியில் வைத்திருக்குமாறு எங்களிடம் வலியுறுத்தினார். ஆனால் போட்டியின் நாளில், அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவை அணியில் சேர்க்க நினைத்தோம். அப்போது, ரோஹித் கால்பந்து விளையாடி காயம் அடைந்தார். அதன் பிறகே விருத்திமான் சாஹா அறிமுகமானார். அன்றைய தினம் எங்கள் தேர்வுக்குழு யாரும் விரக்தியடைய கூடாது என்று நினைத்தோம். ஒருவர் தகுதியற்றவராக இருந்தால், அந்த வீரரை தேர்வு செய்யாதீர்கள். மற்ற வீரர்களுக்கு திறமை இல்லை என்பது போல் தோற்றமளிக்கிறீர்கள். அதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்” என தெரிவித்தார்.