Goodbye movie trailer: அமிதாப்பச்சன் மகளாக ராஷ்மிகாவின் பாலிவுட் என்ட்ரி... வெளியான ட்ரெய்லர்!
தொடர்ந்து பாலிவுட்டில் வரிசைகட்டி படங்களில் நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அவரது முதல் பாலிவுட் படமான குட்பை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'குட் பை' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிரபல பாலிவுட் திரைப்படங்களான குயின், சூப்பர் 30 படங்களை இயக்கிய விகாஸ் பாய் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா, நீனா குப்தா ஆகியோர் நடித்துள்ள படம் ’குட்பை’. டார்க் காமெடி வகையறாவாகவும் குடும்ப செண்டிமெண்ட் கலந்தும் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
View this post on Instagram
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா புஷ்பா படம் மூலம் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனார்.
View this post on Instagram
தொடர்ந்து பாலிவுட்டில் வரிசைக்கட்டி படங்களில் நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அவரது முதல் பாலிவுட் படமான குட்பை படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படங்கள் தவிர ரன்பீர் கபூருடன் அனிமல், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு ஆகிய படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.