Kedar Jadhav Retirement: தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!
கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று (ஜூன் 2) அறிவித்தார்.
ஓய்வை அறிவித்த கேதர் ஜாதவ்:
இந்திய கிரிக்கெட் அணி வீரரான கேதர் ஜாதவ் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதேபோல், கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமானார்.
அந்தவகையில் 73 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள கேதர் ஜாதவ் 1389 ரன்களை குவித்துள்ளார். இதில், 6 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களும் அடங்கும். டி20 போட்டிகளை பொறுத்தவரை 122 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு அரைசதம் அடங்கும்.
சி.எஸ்.கே வீரர்:
ஐ.பி.எல். போட்டிகளை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார் கேதர் ஜாதவ். இதுவரை மொத்தம் 95 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 1208 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணியிலும் ஐபிஎல் சீசன்கள் விளையாடி உள்ளார்.
இந்நிலையில் தான் கேதர்ஜாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று ஜூன் 3 ஆம் தேதி அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வை அறிவித்த அதே ஸ்டைலில் தான் சென்னை அணியின் முன்னாள் வீரரான கேதர் ஜாதவ்வும் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். அதாவது தோனி தான் இந்திய அணிக்காக விளையாடிய மொத்த நேரத்தையும் பதிவிட்டு நன்றி கூறி ஓய்வை அறிவித்திருந்தார்.
Kedar Jadhav has announced his retirement from all forms of cricket. ⭐ pic.twitter.com/NqxkfkdKCJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 3, 2024
அதே போல கேதர் ஜாதவும் தனது சமூக வலைதள பக்கத்தில்,” எனது கிரிக்கெட் வாழ்க்கையில் 1500 மணி நேரம் முழுவதும் அன்பும், ஆதரவும் அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி, அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கருதி கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: T20 World Cup: ரசிகர்களே உணர்ச்சிவசப்படாதீங்க.. கிரிக்கெட் மைதானத்திற்குள் துப்பாக்கியுடன் களம் இறங்கும் போலீஸ்!
மேலும் படிக்க: Watch Video: டி20 உலகக் கோப்பையில் 2 முறை முதல் ஓவரில் முதல் விக்கெட்.. அசத்திய நமீபிய பவுலர் ட்ரம்பெல்மேன்..!