Watch video : ஆத்தாடி என்னா பந்து... இன் ஸ்விங் பந்தால் இங்கிலாந்து கேப்டனை இயங்காமல் செய்த புவி.. வைரல் வீடியோ!
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரை இந்திய அணி வீரர் புவனேஷ்வர் குமார் க்ளீன் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் சவுதாம்ப்டன் நகரில் நேற்று இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 198 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். ஆட்டத்தின் முதல் ஓவரிலே முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில், புவனேஷ்வர் குமார் ஒரு ஆபத்தான இன்ஸ்விங்கரை வீசினார். அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அந்த பந்தை எப்படி ஆடுவது என்று தெரியாமல் உள்ளே விட, பந்து நேராக போல்டை தாக்கியது. இதன்மூலம் அதிரடி ஆட்டகாரர் பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
BOWLED!
— Doordarshan Sports (@ddsportschannel) July 7, 2022
Bhuvneshwar Kumar gets the big wicket, Jos Buttler gone for duck 🙌 #ENGvIND pic.twitter.com/NClQLHXFgp
அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய டேவிட் மலான் அதிரடியாக ஆடினார். அவர் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசினார். 21 ரன்கள் எடுத்த டேவிட் மலான் ஹர்திக் பாண்ட்யா பந்தில் போல்டாகினார்.
அடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டன் ஹர்திக் பாண்ட்யா பந்தில் டக் அவுட்டாகினார். தொடக்கம் முதலே தடுமாறி வந்த ஜேசன்ராய் அணியின் ஸ்கோர் 33 ரன்களாக இருந்தபோது 16 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹார்திக் பாண்ட்யா பந்தில் அவுட்டானார். 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த தடுமாறிய இங்கிலாந்து அணிக்கு ஹாரிப்ரூக் மற்றும் மொயின் அலி அணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மொயின் அலி அதிரடியாக ஆடினார். அவருக்கு ஒத்துழைப்ப தந்த ஹாரி ப்ரூக் 23 பந்தில் 2 பவுண்டரியுடன் 1 சிக்ஸருடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து அந்த அணியில் ஆல்ரவுண்டர் சாம்கரன் களமிறங்கினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த மொயின் அலி ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 36 ரன்கள் விளாசிய மொயின் அலி சுழற்பந்துவீச்சாளர் சாஹல் அவுட்டாக்கினார்.
சாம்கரண் 4 ரன்களில் ஆட்டமிழக்க, டெயிலண்டராக களமிறங்கிய கிறிஸ் ஜோர்டன் அதிரடியாக ஆடினார். அவர் 17 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் 51 ரன்கள் வீசி அசத்திய ஹர்திக்பாண்ட்யா 4 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப்சிங் , சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஹர்திக்பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்