Jemimah Rodrigues Dance Video: போட்டியின் நடுவே ’க்யூட்’ நடனம்.. மைதானத்தில் மனதை பறித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்!
பெங்களூர் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது டெல்லி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் எல்லைக் கோட்டில் நின்று மகிழ்ச்சியில் நடனமாடி கொண்டிருந்தார்.
மும்பையில் உள்ல பிரபோர்ன் மைதானத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக்கில் தனது வெற்றிநடையை தொடங்கியது.
டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷஃபாலி வர்மா (45 பந்துகளில் 84 ரன்கள்) மற்றும் கேப்டன் மெக் லானிங் (43 பந்துகளில் 72 ரன்கள்) ஆகியோரின் முக்கிய பங்களிப்புடன் 223/2 ரன்களைக் குவித்தது.
பதிலுக்கு பேட்டிங்கில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.
இந்தநிலையில், பெங்களூர் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது டெல்லி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் எல்லைக் கோட்டில் நின்று மகிழ்ச்சியில் நடனமாடி கொண்டிருந்தார். இதை மைதானத்தில் பார்த்த ரசிகர்கள் வீடியோவாக எடுத்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். கூடியிருந்த பார்வையாளர்கள் அதிக சத்தம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். ஜெமிமாவின் நடன வீடியோ சில நிமிடங்களில் வைரலானது.
FUUULLL MAJJAAAA 🏃🏽♂️🏃🏽♂️ https://t.co/LABmFPkWRW
— Jemimah Rodrigues (@JemiRodrigues) March 5, 2023
சில நாட்களுக்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்த பிறகு, சக வீரர்கள் முன் கிட்டார் வாசித்து பாடி மகிழ்ந்தார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது ஜெமிமாவும் நடனம் ஆடி, தனக்கு பேட்டிங் மட்டுமின்றி ஆடவும், பாடவும், கிடார் வாசிக்கவும் தெரியும் என ரசிகர்களிடம் கெத்தாக காட்டி வருகிறார்.
SCCCENESSSS 🏃🏽♂️🏃🏽♂️ https://t.co/MwCnUfPzrH
— Jemimah Rodrigues (@JemiRodrigues) March 5, 2023
இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானதை தொடர்ந்து, அதை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட்டும் செய்திருந்தார். நேற்றைய போட்டியின்போது நாலாவதாக களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸின் போது, அவர் இடுப்பளவு உயர நோ-பால் வீசப்பட்டதைச் சரிபார்ப்பதற்கு அவரது இன்னிங்ஸின் போது, டிசிஷன் ரிவியூ சிஸ்டத்தையும் (டிஆர்எஸ்) பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.