Watch video : ஒரே பந்து தான்.. மேஜிக் செய்த பும்ரா.. நடையைக்கட்டிய ஸ்மித்..
Jasprit Bumrah : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா, ஸ்டீவன் ஸ்மித்தை விக்கெட்டை எடுத்து வீழ்த்திய இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிங்க் பால் டெஸ்ட்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 180 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக நிதிஷ் ரெட்டி அதிகப்பட்சமாக 42 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 48 ரன்கள் விட்டுக்கொடுத்க்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. இன்றைய இரண்டாம் நாள் தொடங்கிய நிலையில் நாதன் மெக்ஸ்வீன்னியை பும்ரா ஆட்டமிழக்க செய்தார். அடுத்ததலா ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கினார்.
இதையும் படிங்கள் Jasprit Bumrah : போர்க்கதை ஆயிரம்.. இன்னும் ஒரு விக்கெட் தான்.. சாதனைக்கு அருகில் பும்ரா!
ஸ்மித் விக்கெட்:
சில நாட்களாக பெரிய ஃபார்மில் இல்லாத ஸ்மித் நிச்சயம் இந்த போட்டியில் பெரிய அளவில் ரன்கள் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பும்ரா பந்துவீச்சில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். ஸ்மித் விக்கெட் ஆவதற்கு முன் பந்துகளை ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசி கொண்டிருந்த பும்ரா, ஒரு பந்தை மட்டும் புத்திசாலித்தனமாக லெக் சைட் திசையில் வீசி ஸ்மித்தின் விக்கெட்டை தந்திரமாக வீழ்த்தி அசத்தினார்.
ITS JASPRIT BUMRAH vs AUSTRALIA....!!!!!
— Johns. (@CricCrazyJohns) December 7, 2024
- India is blessed to have Bumrah. pic.twitter.com/pQS1N9OCtC
மைல்கல்:
ஒரு காலண்டர் ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர்என்ற பெருமையை கபில் தேவ் மற்றும் ஜாகீர் கானுக்கு அடுத்து பும்ரா பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டில் தனது 11வது டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டினார் பும்ரா. கபில் தேவ் 1983 இல் 75 டெஸ்ட் விக்கெட்டுகளுடன், 1979 இல் 74 விக்கெட்டுகளுடன், ஒரு வருடத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளராக அதிக விக்கெட் எடுத்தவர் என்கிற சாதனையுடன் உள்ளார்.