![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: சொந்த ஊருக்கு சென்ற பும் பும் பும்ரா! உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ
நான் எப்போதும் என் அணிக்காக உதவுவதை என்னுடைய அணியை வெற்றிப்பாதகைக்கு அழைத்துச் செல்வதை நினைத்து பெருமைபடுகிறேன் என்று ஜஸ்ப்ரித் பும்ரா கூறினார்.
![Watch Video: சொந்த ஊருக்கு சென்ற பும் பும் பும்ரா! உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ Jasprit Bumrah, T20 World Cup's Player Of The Tournament, Receives Grand Welcome In Ahmedabad As He Returns Home Watch Video Watch Video: சொந்த ஊருக்கு சென்ற பும் பும் பும்ரா! உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/07/ffe0e09fd786aaf3cda7bd1f7f3c729e1720366655587572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தனது சொந்த ஊரான அகமதாபாத் சென்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு:
ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்று அசத்தியது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்தது இந்திய அணி. பின்னர் இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பாரட்டு விழா நடைபெற்றது. அப்போது பிசிசிஐ 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கி கெளரவித்தது.
இச்சூழலில் இந்திய அணி வீரர்கள் செல்லும் இடம் எல்லாம் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிகழ்விற்கு சென்ற ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரை அம்பானி குடும்பம் கெளரவித்தது. அதேபோல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் நேற்று அவரது சொந்த ஊரான ஹைதராபத்திற்கு சென்றார். அப்போது அங்கே அவரை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இந்நிலையில் தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா இன்று சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். அதாவது குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
A Grand Welcome of Jasprit Bumrah at his Home in Ahmedabad. 🔥
— Tanuj Singh (@ImTanujSingh) July 7, 2024
- The Greatest of this Generation. 🐐 pic.twitter.com/SibwrRDnV4
ஜஸ்ப்ரித் பும்ராவை ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எனது அணிக்கு உதவுவதை நினைத்து பெருமை படுகிறேன்:
ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது குறித்து பேசுகையில்,”நான் எப்போதும் என் அணிக்காக உதவுவதை என்னுடைய அணியை வெற்றிப்பாதகைக்கு அழைத்துச் செல்வதை நினைத்து பெருமைபடுகிறேன். இது எனது நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்த நம்பிக்கை தான் என்னை போட்டிக்குள் இழுத்துச் செல்கிறது.
டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பதட்டமான சூழலில் நான் இந்திய அணிக்காக பந்து வீசினேன். அதை நான் செய்து இந்தியாவின் வெற்றிக்கு உதவியதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பும்ரா கூறினார்.
டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளி ஜஸ்ப்ரித் பும்ரா வீசினார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழல் நிலவியபோது 12 பந்துகள் வீசி 6 ரன்கள் மட்டுமே பும்ரா விட்டுக்கொடுத்தார் என்பதும் பரபரப்பான சூழலில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)