Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய மலிங்கா! பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் வேகப்புயல்
Mumbai Indians: ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர்களான மலிங்கா மற்றும் பொல்லார்ட் ஆகியோர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளனர்.
Mumbai Indians: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மலிங்கா பந்துவீச்சு பயிற்சியாளராகவும், பொல்லார்ட் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்:
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் மலிங்கா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி 4 கோப்பைகளை வெல்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்நிலையில், மலிங்கா மும்பை அணியில் பயிற்சியாளராக இணைவது, வீரர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் மும்பை ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
ஐ.பி.எல். தொடரில் மலிங்கா:
2009ம் ஆண்டு தொடங்கி 2019ம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடிய மலிங்கா, 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 6 முறை 4-விக்கெட்ஸும், ஒரு முறை 5-விக்கெட்ஸும் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறப்பான பந்துவீச்சாகும்.
2019ம் ஆண்டு இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி பெற இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த பந்தை துல்லியமான யார்க்கராக வீசி, ஷர்துல் தாக்கூரை ஆட்டமிழக்கச் செய்த மலிங்கா மும்பை அணிக்கு நான்காவது கோப்பையை பெற்று தந்தார்.
𝗕𝗔𝗧𝗧𝗜𝗡𝗚 𝗖𝗢𝗔𝗖𝗛 - 🄿🄾🄻🄻🄰🅁🄳
— Mumbai Indians (@mipaltan) October 20, 2023
𝗕𝗢𝗪𝗟𝗜𝗡𝗚 𝗖𝗢𝗔𝗖𝗛 - 🄼🄰🄻🄸🄽🄶🄰
Paltan, आता कसं वाटतय? 🤩#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan @malinga_ninety9 @KieronPollard55 pic.twitter.com/bdPWVrfuDy
பயிற்சியாளர் பொறுப்பு:
தென்னாப்ரிக்காவின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராகவும், பேட்டிங் பயிற்சியாளராக பொல்லார்ட்டும் உள்ளனர். இந்நிலையில் பவுலிங் பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா SA20 லீக்கில் மும்பை இந்தியன்சுக்கு சொந்தமான MI கேப்டவுன் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் லீக் தொடரில் MI நியூயார்க் அணிக்கும் மலிங்கா தான் பவுலிங் பந்துவீச்சாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து தற்போது மும்பை அணியின் பந்துவீச்சாளராகவும் மலிங்கா பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக மலிங்கா செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
மலிங்கா மகிழ்ச்சி:
இதுதொடர்பாக மலிங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது உண்மையிலேயே எனக்கு ஒரு மரியாதையான அங்கீகாரம். MI நியூயார்க் மற்றும் MI கேப்டவுனைத் தொடர்ந்து OneFamily இல் எனது பயணம் தொடர்கிறது. மார்க், பாலி, ரோஹித் மற்றும் மற்ற அணியினருடன், குறிப்பாக கடந்த சீசனில் நான் விரும்பிய பந்துவீச்சு பிரிவினர் மற்றும் ஆர்வமுள்ள இளம்படையினருடன் சேர்ந்து பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.