Rajasthan Royals Coach:ராஜஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் யார்? வெளியான முக்கிய தகவல்
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர்:
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கோப்பை தொடரை வென்று வரலாறு படைத்தது. இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வீரர்கள் மெகா ஏலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட், தொடர்ந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் மற்றும் ஆலோசகராக பணியாற்றினார்.
அதன்பின் 2016ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போதைய டெல்லி கேபிட்டல்ஸ்) அணிக்கு மாறிய ராகுல் டிராவிட், 2019ஆம் ஆண்டு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வரை அங்கேயே இருந்தார். பின்னர், 2021ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.
🚨 RAHUL DRAVID HAS BEEN APPOINTED AS RAJASTHAN ROYALS' HEAD COACH...!!! 🚨 (Espncricinfo). pic.twitter.com/H8lFGG6lGU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 4, 2024
ராகுல் டிராவிட்டை தொடர்ந்து முன்னாள் இந்திய அணியின் வீரர் விக்ரம் ராத்தோரை துணை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னாள் தேர்வு குழு உறுப்பினர், மற்றும் ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்த போது அவரது அணியில் பயிற்சியாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.
இச்சூழலில் தான் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Bajrang Punia:பாஜகவிற்கு எதிராக ஸ்கெட்ச்.. காங்கிரஸில் கைகோர்க்கும் பஜ்ரங் புனியா?
மேலும் படிக்க: World Test Championship Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?