Chahal IPL Experience: ‘மும்பை இந்தியன்ஸ் வீரரால் எனக்கு உயிர் போயிருக்கும்.. சாஹலின் அதிர்ச்சி வீடியோ..!
ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் கருண் நாயரிடம் பேசிய யுஸ்வேந்திர சாஹல், 2013 இல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடிய போது நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் பற்றி பேசினார்.
யுஸ்வேந்திர சாஹல் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது புதிய அணியுடன் சிறப்பாக விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் அவர், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தற்போது, ஐபிஎல் 2022 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளில் 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை தொடருவார் என்று நம்புகிறார். களத்திற்கு வெளியே, சாஹல் டிரஸ்ஸிங் ரூமில் மிகவும் ஜாலியான நபராக
இந்த நிலையில், கடந்த 2013 இல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடியபோது, ஒரு வீரர் குடிபோதையில் தன்னை பால்கனியிருந்து தொங்கவிட்டதாக சாஹல் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், கருண் நாயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் சாஹல் இந்த சம்பவம் குறித்து பேசினார். அதில், “என் கதை, சிலருக்குத் தெரியும். நான் இதைப் பற்றி பேசவில்லை, இதை நான் பகிரவில்லை. 2013 இல், நான் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இருந்தேன். பெங்களூரில் ஒரு போட்டி இருந்தது. அதன் பிறகு ஒரு கெட் டுகெதர் இருந்தது. ஒரு வீரர் மிகவும் குடிபோதையில் இருந்தார். அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை. அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்னை அழைத்து, என்னை வெளியே அழைத்துச் சென்றார். பின்னர், என்னை பால்கனியில் இருந்து தொங்கவிட்டார். நான் 15ஆவது மாடியில் இருந்தேன். திடீரென்று அங்கு இருந்த பலர் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனக்கு ஒருவித மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் எனக்கு தண்ணீர் கொடுத்தார்கள். தப்பித்துவிட்டேன் என்று நான் உணர்ந்த ஒரு சம்பவம் இது. சிறிய தவறு நடந்திருந்தால், நான் கீழே விழுந்திருப்பேன்” என்று கூறினார்.
Royals’ comeback stories ke saath, aapke agle 7 minutes hum #SambhaalLenge 💗#RoyalsFamily | #HallaBol | @goeltmt pic.twitter.com/RjsLuMcZhV
— Rajasthan Royals (@rajasthanroyals) April 7, 2022
சாஹல் 2013 இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார். அதன் பிறகு அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றார். ஐபிஎல்லில் தனது அறிமுக சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரே ஒரு ஆட்டத்தில் விளையாடி எந்த விக்கெட்டையும் எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்