INDW vs PAKW: 248 ரன்கள் டார்கெட்.. பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா? இலக்கை எட்டுமா பாகிஸ்தான்?
INDW vs PAKW: உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 248 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

INDW vs PAKW: மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. கொழும்புவில் இன்று பிரேமதாசா மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது.
நிதானமாக தொடங்கிய ப்ரதிகா - மந்தனா:
இதன்படி, ஆட்டத்தை ப்ரதிகா ராவல் - மந்தனா ஜோடி தொடங்கியது. இருவரும் இணைந்து தொடர்ந்து நிதானமாக ஆடினர். மந்தன நிதானமாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், 23 ரன்களில் பாத்திமா பந்தில் அவுட்டானார். இதையடுத்து, ஹர்லீன் தியோல் களமிறங்கினார்.

இந்த ஜோடியும் நிதானமாக ஆட சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ப்ரதிகா போல்டானார். அவர் சாதியா பந்தில் அவர் 31 ரன்களில் அவுட்டாக அடுத்து இந்திய அணி தடுமாறியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்மன்ப்ரீத் கவுர் நிதானமாக ஆடினார்.
நிதான ஆட்டம்:
ஹர்மன்ப்ரீத் கவுர் 34 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 19 ரன்களுடன் அவுட்டானார். மறுமுனையில் ஹர்லீன் தியோல் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். அபாரமாக ஆடி அரைசதத்தை நோக்கி முன்னேறிய ஹர்லீன் தியோல் அரைசதத்தை நோக்கி முன்னேறினார். அவர் 65 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 46 ரன்களுடன் அவுட்டானார்.
அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிதானமாக ஆட அவருக்கு தீப்தி ஷர்மா ஒத்துழைப்பு தந்தார். விக்கெட்டுகள் இழுந்து வந்ததால் தீப்தி நிதானமாக ஆடினார். மறுமுனையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்களில் அவுட்டாக இந்தியா சற்று தடுமாறியது. இந்தியா 200 ரன்களை போராடி கடந்தது. சினேகா ராணாவும் 20 ரன்களில் அவுட்டாக கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் அபாரமாக ஆடினார்.
248 ரன்கள் டார்கெட்:
அவர் அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 35 ரன்களை எடுத்து கடைசி வரை அவுட்டாகாமால் இருந்தார். இதனால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 247 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் வீராங்கனை டயானா பைய்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தற்போது பாகிஸ்தான் அணி இலக்கை நோக்கி களமிறங்கி ஆடி வருகிறது. மைதானம் பந்துவீச்சிற்கு ஒத்துழைப்பதால் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணி சவாலான பந்துவீச்சை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ரேணுகா சிங், கிரந்தி, ஸ்ரீ சாரணி, தீப்தி ஷர்மா பந்துவீச்சில் அசத்த காத்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடைபெற்ற ஆசிய கோப்பை மோதலில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் மோதல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த தொடரில் இரு அணி வீரர்களும் சைகளால் மோதிக்கொண்டனர். இதனால், இந்த போட்டியில் வெற்றி பெற இரு நாட்டு வீராங்கனைகளும் முனைப்பு காட்டுவார்கள்.




















