மேலும் அறிய

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: முதல் ஒருநாள் போட்டியில் யாரை எடுப்பது? ரோகித் சர்மாவிற்கு தலைவலி!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 6ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. பிப்ரவரி  6-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும், பிப்ரவரி 16-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் தொடங்க உள்ளது.

இந்நிலையில், முதலில் தொடங்க இருக்கும் ஒரு நாள் போட்டிக்காக அகமதாபாத்திற்கு இந்திய அணி இன்று சென்றது. அங்கு சென்ற பிறகு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மூன்று இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி ஷிகார் தவான், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் யார் யார் இவர்களுக்கு மாற்று வீரர்களாக களமிறங்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே இந்தத் தொடருக்கு ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்ட ஷாரூக் கான், சாய் கிஷோர் மற்றும் ரிஷி தவான் ஆகிய மூன்று பேரில் இருவர் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: முதல் ஒருநாள் போட்டியில் யாரை எடுப்பது? ரோகித் சர்மாவிற்கு தலைவலி!

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷன், தீபக் ஹூடா மற்றும் பிரசித் கிருஷ்ண களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஷிகர் தவானிற்கு பதிலாக ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷன் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. அதேபோல் நடுகள வரிசையில் தீபக் ஹூடா ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அணியில் களமிறங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை என்பதால் இந்திய அணியின் பேட்டிங் சற்று பலவீனமாக அமைந்துள்ளது. 

ஒருநாள் அணி விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ் , வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி  ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 2வது ஒருநாள் போட்டியில் இருந்து கேஎல் ராகுல் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக குணமடைந்து வரும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக அக்சர் படேல் டி20 போட்டிகளில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ், ஒரு நாள் அணி விவரம்:

பொல்லார்ட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், போனர், டேரன் ப்ராவோ, ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஹோப், ஹெசெயின், ஜோசஃப், பிராண்டன் கிங், பூரன், கீமர் ரோச், செஃபெர்ட், ஸ்மித், வல்ஷ் ஜூனியர்.

மேலும் படிக்க:“உன் கோவத்தை கோலியிடம் காட்டு...” அட்வைஸ் பண்ண வெட்டோரி; நினைவு கூறும் சாஹல்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
ABP Premium

வீடியோ

விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
Embed widget