மேலும் அறிய

Watch Video: அஸ்வின் செஞ்ச காரியத்தால கண்ணீர் விட்டு அழுத ஜெய்ஸ்வால்! அப்படி என்ன பண்ணாரு?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோது அஸ்வின் செய்த காரியத்தால் பிரபல வீரர் ஜெய்ஸ்வால் குழந்தை போல கண்ணீர் விட்டு அழுதார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல சுழற்பந்துவீச்சாளருமான அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் தொடர் மூலமாக அவர் ஆட உள்ளார். 

ஓய்வுக்கு பிறகு பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் இவரை நேர்காணல் செய்திருப்பார். அதில், ஜெய்ஸ்வாலுக்கும் அவருக்கும் இடையேயான உறவு பற்றி பேசியிருப்பார். 

ஜெய்ஸ்வால் - அஸ்வின்:

"ஜெய்ஸ்வாலுக்கும் எனக்கும் ரொம்ப ஸ்பெஷல் பாண்ட். நான் முதன்முதலில் ஆர்.ஆர். அணியில் சேர்ந்தேன். அந்த பையன் ரொம்ப டேலண்ட். கிரிக்கெட் விளையாடும்போது நிறைய பேரு அதைப் பேச மாட்டாங்க. பால் புதுசா இருக்கும்போது த்ரோ தரையில் அடிக்கக்கூடாது. அப்போதான் பால் ஸ்விங் ஆகும். 

இரண்டு பால் ஸ்விங் ஆனா கூட, ஆட்டம் மாறிடும். அந்த மாதிரி நிறைய விஷயங்கள் தெரியாமல் கிரிக்கெட்டர்கள் நிறைய பேர் வர்றாங்க. அதற்கு காரணம், அவர்கள் வாழ்க்கையில சரியான ஆட்களை அவர்கள் சந்திக்கவில்லை. அந்த மாதிரி வந்த பையன் அவன். ஆனா, பாக்கும்போதே தெரியும். ப்பா.. என்னமா ஆட்றான்?

View this post on Instagram
 
A post shared by Jey (@jai__jeyy)

சிறு குழந்தை போல அழுத ஜெய்ஸ்வால்:

நாலு பேருக்கு பயத்தை உண்டு பண்ணப்போறான். உலகத்துல ஒரு பெரிய ஆளா வர்றதுக்கு  வாய்ப்பு இருக்குது. அவனுக்கு ஒரு பசி இருந்துச்சு. ஒரு தடவை இப்படிதான் பண்ணனும்னு சொன்னிட்டோம்னா, எதையாவது பண்ணி அதை பண்ணுவான். உழைப்பான். உழைப்புக்கு அஞ்சமாட்டான்.

ராஜாமணி ட்ரெயினிங் பண்ணுவாங்க. அப்போ ஃபாரின் ப்ளேயர்ஸ், இந்தியன் ப்ளேயர்ஸ் மிங்கிள் ஆவாங்க. அப்போ பெரும்பாலும் ஒரு சின்ன உரசல் சில நேரம் இருக்கும். அந்த மாதிரி ஒரு உரசல் நடக்கும்போது நான் போயி நின்னேன். அவன் என்ன குறைவா உனக்குத் தெரியுறான்? அந்த மாதிரி எல்லாம் பேசாதனு ஒரு வாட்டி கேட்டேன். அதுல இருந்து கூடவே போயி நிக்குறது. தப்பு பண்ணா சொல்லித்தர்றது. அவனுக்கு திடீர்னு அழுகை வந்துடுச்சு. அதைப் பாக்கும்போது நமக்கு கொஞ்சம் கஷ்டம் ஆகிடுச்சு. சின்னக்குழந்தை மாதிரி அழுறானேனு. "

இவ்வாறு அவர் கூறினார். 

இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர் ஜெய்ஸ்வால். அவரது சிறப்பான ஆட்டத்தில் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது தவிர்க்க முடியாத வீரராக திகழ்கிறார். 

ஜெய்ஸ்வால் மிகவும் சாதாரண  பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை பானிப்பூரி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அந்த கடையில் பணியாற்றிக் கொண்டே கிரிக்கெட் பயிற்சி செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget