ICC T20 Ranking : ரெண்டு பாயிண்ட் மட்டும்தான்...! பாபர் அசாமை நெருங்கிய சூர்யகுமார் யாதவ்..! விரைவில் முதலிடம்..?
இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஐ.சி.சி.யின் டி20 பேட்டிங் தரவரிசையில் முகமது ரிஸ்வான் மற்றும் மார்க்ரமை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ். கடந்த சில காலமாக இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார். அதிரடியான பேட்டிங்கிற்கு சொந்தக்காரரான சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 44 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 76 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
🔹 Suryakumar's rapid rise
— ICC (@ICC) August 3, 2022
🔹 Hosein makes big gains
🔹 Markram breaks into the top 🔟
Some big movements in the @MRFWorldwide ICC Men's T20I Player Rankings 📈
இந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் தரவரிசையில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானையும், தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரமையும் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் 816 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 818 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் ரிஸ்வான் மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் மார்க்ரம் நான்காவது இடத்திலும் உள்ளார். முதல் 10 இடத்தில் இந்திய வீரரர்கள் வேறு யாரும் இடம்பெறவில்லை.
இந்திய கேப்டன் ரோகித்சர்மா 16வது இடத்திலும், இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட்கோலி ஒரு இடம் சறுக்கி 28வது இடத்திற்கு சென்றுள்ளார். தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியாவின் சூர்யகுமார் யாதவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சூர்யகுமார் யாதவ் 22 போட்டிகளில் ஆடி 1 சதம், 5 அரைசதங்களுடன் 648 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 117 ரன்கள் விளாசியுள்ளார். 13 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 340 ரன்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 64 ரன்கள் விளாசியுள்ளார்.
மேலும் படிக்க : Rohit Sharma New Record : "ஹிட்மேன்" சாதனைகளில் புதிய மைல்ஸ்டோன்..! விராட்கோலி சாதனை முறியடிப்பு..!
மேலும் படிக்க : ஈடன் கார்டனில் மீண்டும் இந்தியா சார்பில் களமிறங்கும் கங்குலி மற்றும் ஷேவாக்; மரண வெய்ட்டிங்கில் கிரிக்கெட் ரசிகர்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்