India World Cup Squad: இதுவே இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசம்... 2011 ஒப்பிட்டால் 2023 இந்திய அணி பலவீனம்தான்!
ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற இருப்பதால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியானது வருகின்ற அக்டோபர் மாதம் 5ம் தேதி இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர்களை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் நேற்று அறிவித்தார். 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற இருப்பதால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியை 2011ல் வென்ற அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால், ரோஹித் சர்மா தலைமையிலான அணி சற்று பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கான வித்தியாசங்களை இங்கே பார்க்கலாம்.
மகேந்திர சிங் தோனியின் தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியின் சராசரி வயது 28, அதேசமயம் இந்த இந்திய அணியின் சராசரி வயது 30.06 ஆண்டுகள் ஆகும்.
இந்த முறை 30க்கு வயதுக்கு மேல் 4 வீரர்கள்:
இந்தியாவின் 2011 உலகக் கோப்பை அணியை பார்த்தால், அப்போது அணியில் இடம்பெற்றிருந்த அனைத்து வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 30 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தார். கேப்டன் தோனி, ரெய்னா, சேவாக், கம்பீர், யுவராஜ் போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் அப்போது 30 வயதிற்கு குறைவான வீரர்களாக இருந்து இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தனர்.
இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள உலகக் கோப்பை அணியின் பேட்ஸ்மேன்களின் வயதைப் பார்த்தால், கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு 36 வயது, விராட் கோலிக்கு 34, சூர்யகுமார் யாதவுக்கு 32, கே.எல்.ராகுலுக்கு 31 வயது. 2011 உலகக் கோப்பை வென்ற அணியிலும் விராட் கோலி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் அணியில் 3 ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்கள்:
2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது, அதில் பந்துவீச்சாளர்களின் பங்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அப்போது வேகப்பந்து வீச்சுக்கு ஜாகீர் கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி அசத்தினர். சுழற்பந்தில் பார்க்கும்போது ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஆனால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இந்தமுறை குல்தீப் யாதவ் மட்டுமே சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். அக்ஸர் படேல், ஜடேஜா ஆகியோர் ஆல்ரவுண்டர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளனர். இது தவிர, வேகப்பந்து வீச்சில் பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் உள்ளனர். இந்த மூன்று வீரர்களும் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒன்றாக விளையாடுவது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
இரு அணிகளுக்கும் இடையே இருந்த ஆல்-ரவுண்டர்கள் :
2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது, யுவராஜ் சிங் ஆல்-ரவுண்டராக மிக முக்கியப் பங்காற்றினார். இவர்களை தொடர்ந்து சேவாக், சச்சின், ரெய்னா, யூசுப் பதான் போன்ற வீரர்கள் ஆல்-ரவுண்ட் சைட்டில் கலக்கினர்.
2023 உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட அணியைப் பார்த்தால், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஷர்துல் தாக்குர் என இடம்பெற்று இருந்தாலும், 2011 உலகக் கோப்பை அணியில் சேவாக் மற்றும் யுவராஜ் முக்கிய பேட்ஸ்மேன்கள் திகழ்ந்தனர். ஆனால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வீரர்கள் யாரும் முக்கிய பேட்ஸ்மேன்கள் இல்லை.
2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ், முகமது ஷமி., ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர்.
2011 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
மகேந்திர சிங் தோனி (கேப்டன் & விக்கெட்), வீரேந்திர சேவாக் (துணை கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், பியூஷ் சாவ்லா, கவுதம் கம்பீர், ஜாகீர் கான், விராட் கோலி, ஆஷிஷ் நெஹ்ரா, முனாஃப் படேல், யூசுப் பதான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர்.