India vs Pakistan T20 World Cup: பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கப் போகும் 11 பேர் ரெடி...! இப்பவே தயாரான இந்திய கேப்டன் ரோகித்..
India vs Pakistan T20 World Cup: உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 16 அணிகளின் கேப்டன்களும் இன்று ஒன்றாக நிருபர்களைச் சந்தித்தனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் என்றாலே இருநாட்டு ரசிகர்களிடையே விசில் பறக்கும். அதுவும் உலக கோப்பை என்றால் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பும். இந்தநிலையில், உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 23ஆம் தேதி விளையாட உள்ளது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா விளையாட உள்ளது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்குகிறது.
Selfie time 😁🤳#T20WorldCup pic.twitter.com/snMOzdPMq3
— ICC (@ICC) October 15, 2022
இந்த தொடருக்கு முன்னதாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 16 அணிகளின் கேப்டன்களும் இன்று மெகா செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களின் முன்னிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் பேசினர்.
All the 16 captains in one frame 📸 🤩
— T20 World Cup (@T20WorldCup) October 15, 2022
All you need to know about the #T20WorldCup 👉https://t.co/No1rXmU2Oi pic.twitter.com/415OVW3EqD
அப்போது பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, “டி 20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் விளையாட உள்ள 11 இந்திய வீரர்கள் பட்டியல் தயாராக உள்ளது. கடைசி நேரத்தில் 11 வீரர்கள் பட்டியலை தயார் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தற்போதே தயார் செய்துவிட்டேன். யார் விளையாடப் போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். போட்டியின்போது இவர்களை எப்போது சந்தித்தாலும் அழுத்தம் இல்லை.
ஆசிய கோப்பையில் சந்தித்தோம், இப்போது சந்தித்தோம், எப்போது சந்தித்தாலும், வீட்டின் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதுதான் குறித்துதான் கேட்போம். அதுதான் முக்கியம். குடும்பம் எப்படி இருக்கிறது? இந்த விஷயத்தைப் பற்றி மட்டும் பேசுவோம். நாம் சந்திக்கும் போதெல்லாம் இதுதான் நடக்கும். எங்கள் முந்தைய தலைமுறையில் நடித்தவர்களும் இதையேதான் சொன்னார்கள். வாழ்க்கை எப்படி இருக்கிறது, எந்த புதிய கார் வாங்கியுள்ளீர்கள், எந்த கார் வாங்கப் போகிறீர்கள் என்பதை பற்றியே எங்களது சந்திப்பு இருக்கும்” என்று தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசும்போது, “ரோஹித் சர்மா என்னை விட மூத்தவர், அவரிடமிருந்து முடிந்தவரை அனுபவத்தைப் பெற முயற்சிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் நிறைய விளையாடியிருக்கிறார்கள். நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ, அது நமக்கு நல்லது” என்று தெரிவித்தார்.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.கே. அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.
காத்திருப்பு வீரர்கள்: ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.
பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அஃப்ரிடி , ஃபகார் ஜமான்.
காத்திருப்பு வீரர்கள்: முகமது ஹாரிஸ், உஸ்மான் காதர் மற்றும் ஷாநவாஸ் தஹானி.