IND vs NZ, 2nd T20: பவுலிங்கில் மிரட்டிய இந்தியா - திணறிய நியூசிலாந்து: பட்டையை கிளப்பும் பதிலடி
IND vs NZ, 2nd T20, Ekana Sports City Stadium: முதல் பாதி ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு 100 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி, லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் எகானா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் முதல் ஓவரில் தொடக்க வீரர் ஃபின் ஆலன் எந்த ரன்களையும் குவிக்காத நிலையில், 3.2 ஓவர்கள் முடிவில் யஸ்வேந்திர சாஹல் பந்தில் க்ளீன் போல்டாகி 11 ரன்களுடன் ஃபின் ஆலன் வெளியேறினார்.
தொடர்ந்து 4.4 ஓவர்களில் டெவான் கான்வே 11 ரன்களில் வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து அடுத்தடுத்தி விக்கெட்டுகள் சரிய, 5 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து 62 ரன்கள் எடுத்து திணறியது.
How about that for a ball! 👍 👍@imkuldeep18 bowled an absolute beaut to dismiss Daryl Mitchell 👏 👏 #TeamIndia | #INDvNZ | @mastercardindia
— BCCI (@BCCI) January 29, 2023
Watch 🎥 🔽 pic.twitter.com/EpgXWYC2XE
தொடர்ந்து 12.4 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணியின் மார்க் சாப்மேனை தீபக் ஹூடா பந்தில் குல்தீப் யாதவ் அட்டகாசமான ரன் அவுட் செய்தார்.
16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை நியூசிலாந்து அணி குவித்த நிலையில், நியூசிலாந்து அணியின் மைக்கேல் பிரேஸ்வால் பவுண்டரிக்கு விரட்டிய பந்தை அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடித்து அசத்தினார். தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் 17.4 ஓவர்களில் இஷ் தீப் ஒரு ரன் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு நியூசிலாந்து அணி 99 ரன்களுக்கு சுருண்டு, 100 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
Innings Break!
— BCCI (@BCCI) January 29, 2023
An outstanding bowling performance from #TeamIndia! 🙌 🙌
2⃣ wickets for @arshdeepsinghh
1⃣ wicket each for @yuzi_chahal, @imkuldeep18, @HoodaOnFire, @Sundarwashi5 & @hardikpandya7
Scorecard ▶️ https://t.co/p7C0QbPSJs#INDvNZ | @mastercardindia pic.twitter.com/z8A9sMIEok
முதல் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில், இன்றைய இரண்டாவது போட்டியில் இந்திய அணி பழி தீர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.