IND vs NZ TEST DAY 4 LIVE: முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து...!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் அப்டேட்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

Background
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தடு. இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், 63 ரன்கள் முன்னிலையுடன் நான்காவது நாளான இன்று இந்திய அணி ஆட்டத்தை தொடங்கி ஆடி வருகிறது.
நியூசிலாந்து அணி சறுக்கலுடன் தொடக்கம்...!
இந்தியாவிற்கு எதிராக 284 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. டாம் லாதம் 2 ரன்களுடனும், வில்லியம் சோமர்வில்லே 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து...!
284 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில்யங் அஸ்வின் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி 2 ரன்களில் வெளியேறினார்.



















